Comments System

header ads

அமைச்சரவையில் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சி எம்.பி க்கள்

எதிர்வரும் நாட்களில் அமைச்சுகளில் மாற்றம் உள்ளிட்ட அமைச்சரவையில் பூரண மாற்றம் ஏற்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அமைச்சுக்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் இரு கட்சிகள் சார்பான குழுவொன்றும் நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகளை வழங்க முடியாது என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள, கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments