Header Ads

Breaking News

வாகரை பிரதேச தவிசாளர் முஸ்லிம் ஒருவரை தாக்கினாரா ?



மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச சபையின் புதிய தவிசாளராக செவ்வாய்கிழமை தெரிவு செய்யப்பட்ட சி.கோணலிங்கம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வாகரை பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சந்தர்ப்பத்தில் அவரால் வழங்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் குறித்த நபர் தேடப்பட்டு வந்த நிலையில் சரணடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு தினங்களுக்கு முன்னர் கதிரவெளி பிரதேச கிராம சேவையாளர் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்கிழமை தவிசாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் கதிரவெளி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்த வேளையில் தகவல்கள் கிடைத்த நிலையில் அந்த வீட்டினை இளைஞர்கள் சுற்றி வளைத்து குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். 

இதன்போது படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலேயே சி.கோணலிங்கம் தேடப்பட்டு வந்த நிலையில் தவிசாளர் தெரிவு இடம்பெற்றதன் பிற்பாடு வாகரை பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments