Comments System

header ads

முஸ்லிம் காங்கிரஸ் ஏன் ஆதரவாக வாக்களித்தது ?


- அபூ ஜாஸி -
நல்லாட்சி ஒன்றை தாபித்து அதில் ஜனாதிபதியையும் , பிரதமரையும் அவர்களுக்கான பதவிகளை பெற்று அவற்றை அலங்காரம் செய்தது வரைக்குமான முஸ்லீம் காங்கிரசின் பங்களிப்பு அளப்பரியது. 

முஸ்லீம் சமூகத்திற்கும், முஸ்லீம் காங்கிரசுக்கும் இது வரைக்கும் ஐ.தே.முன்னணியோ அல்லது சுதந்திரக் கட்சி சார்ந்த ஜனாதிபதியோ மு.கா வையும், சமூகத்தையும் தாங்கிக் நடக்கும் படியான எந்தச் சம்பவங்களும் இதுவரை இடம்பெறவில்லை. அதேவேளை பாரிய குத்து வெட்டுகள் மூலமாக மு.கா அழித்தொழிக்கும் பணியினை கனகச்சிதமாக செய்துள்ளார்கள் என்பது மிக  தெளிவானதாகும். 

அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் மீது இவ்விரு கட்சிகளின் செயல்பாடுகள் பெரிதும் அதிருப் திக்கு உட்பட்ட தொன்றாகும். எந்த காரணம் ஒன்றுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தூக்கி வீசப்பட்டரோ அதே காரணங்களை இவ்வரசும் கொஞ்சமும் குறைவில்லாமல் நிறைவேற்றி இருக்கின்றது. இந்நிலையில் இவ்வரசு மீதான முழு முஸ்லிம் சமூகத்தின் கணிப்பும் எதிரானதாகவே இருக்கின்றது. 

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் தனது மக்களை, வாக்காளர்களை தனியே திருப்திப் படுத்தும் ஒருகட்சியாக இருப்பின் மஹிந்த அணிக்கு வாக்களித்து தனது அதிருப்தியை வெளிக்காட்ட முடியும் இருந்தாலும் தனது சமூகத்தின் உண்மையானது பாதுகாப்பு என்பது நிரந்தரமான ஒன்றாக அமைய வேண்டும் என்கிற மிக நியாயமான காரணத்தையே மிக தெளிவாக வழி நடாத்தல் செய்திருக்கின்றது என்பதே பொருத்தமானதாகும்.

விசேடமாக மக்கள் ஆனையொன்றுக்காக முஸ்லிம் காங்கிரஸ் காத்திருக்கின்றது என்றும் இதற்காக பொருள் கொள்ள முடிகின்றது. அத்துடன் அடுத்து வரும் 2 வருடகால ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்களின்  உரிமைகளுக்கான கடிவாளத்தை கையகப்படுத்தியிருக்கின்றது என்றும் கொள்ள முடிகின்றது.

ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான அழைப்பை மக்கள் ஏற்படுத்துகின்ற போது முஸ்லிம் காங்கிரசும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இதற்காக போராட முடியும். ஆனால் உள்ளூராட்சி தேர்தலுக்கு முந்தியே உருவாக்கப்பெற்ற திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஒன்றில் ஒன்றில் மு.கா மிக நிதானமாக நடந்திருக்கின்றது. அத்துடன் மக்கள் ஆணைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதன் ஊடாக பெரும்பான்மை மக்களின் ஆணையை எதிர்த்து அரசை கவிழ்த்து நிலையான அவப்பெயர், அபவாதம் ஒன்றில் இருந்தும் முஸ்லீம் காங்கிரஸ் மீண்டிருக்கின்றது.

இருப்பினும் ஐ.தே.க மற்றும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சு.க என்பன முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் எவ்வாறான கைம்மாறோன்றினை செய்வார்கள் என்பதனை ஊகிக்க முடியும். அவரையும் நமது கருத்தாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமும் நமக்கிருக்கின்றது. 

Post a Comment

0 Comments