Breaking News

கல்முனை மாநகரம் மீண்டும் முஸ்லீம் காங்கிரஸிடம் ; மேயராக சட்டத்தரணி ரகீப்



கல்முனை மாநகர சபைக்கான ஆட்சியமைக்கும் வேலைகள் இப்போது மாநகர சபையின் உறுப்பினர்கள் முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

நிகழ்வுகளுக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்றார். முஸ்லீம் காங்கிரஸ் அணியின் சார்பில் மருதமுனை யை சேர்ந்த சட்டத்தரணி கௌரவ. ரகீப் அவர்கள் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்டார். அதேபோன்று தமிழ் கூட்டமைப்பின் சார்பில் ஹென்றி மகேந்திரன் வழிமொழியப்பட்டார். 

வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 31 உறுப்பினர்கள் 7 வாக்குகள் ஹென்றி மகேந்திரன் பெற்றுக் கொள்ள சபையில் அமோக வாக்குகளால் முஸ்லீம் காங்கிரஸ் மேயர் பதவியை தக்க வைத்துக் கொண்டது. 

No comments