Breaking News

வெள்ளை மாளிகையில் வரவேற்ப்பு



ஜோர்ஜிய அணியை வீழ்த்தி கல்லூரிகளுக்கு இடையிலான தேசிய கால்பந்து சம்பியன் பட்டத்தை வென்ற அலபாமா பல்கலைக்கழக கால்பந்து அணிக்கு வெள்ளை மாளிகையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் நிக் சபான் தலைமையில் குறித்த அணி நேற்று வெள்ளை மாளிகைக்குச் சென்ற போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமோக வரவேற்பளித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் இந்த வெற்றி சிறப்பானதெனவும், கடின உழைப்பும், சிறந்த தயார்படுத்தலும் இந்த வெற்றிக்கு வழிகோலியதாக குறிப்பிட்ட ட்ரம்ப் அலபாமா அணி குறித்து பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அலபாமா அணியின் தலைமைப் பயிற்சியாளர் நிக் சபான் குறிப்பிடுகையில்,
"வெள்ளை மாளிகைக்கான அழைப்பு அதிகமானோருக்கு கிடைப்பதில்லை. ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்கும் வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்த வகையில் இது சிறப்பான ஒரு தருணம் அத்தோடு அலபாமா அணியின் சாதனைகளுக்கு கிடைத்த சந்தர்ப்பமே இது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 
இதேவேளை போட்டி நடைபெற்ற பின்னர் அணி வீரரான Bradley Bozeman தனது காதலியிடம் முதல்தடவையாக தன் காதலை வெளிப்படுத்தியிருந்தார்.
நேற்றைய சந்திப்பின்போது இது தொடர்பாகவும் ட்ரம்ப் நகைச்சுவையாக உரையாடியுள்ளார். ”உங்கள் காதலி இன்னும் உங்களுடன் இருக்கின்றாரா” என்று ட்ரம்ப் சிரித்துக்கொண்டே வினவ ”அதிஷ்டவசமாக அவர் என்னுடன் உள்ளார்” என Bradley Bozeman பதிலளித்துள்ளார்.

No comments