Header Ads

Breaking News

அலி ஷாகிர் மௌலானாவுக்கு ராஜாங்க அமைச்சு, எ.எல்.எம். நசீருக்கு பிரதியமைச்சு ?



முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் மேலதிகமாக இராஜாங்க அமைச்சும், பிரதியமைச்சும் அமைச்சரவை மாற்றத்தில் கிடைக்கவுள்ளது இதில் இராஜாங்க அமைச்சை அலிசாஹிருக்கும், பிரதியமைச்சை ஏ.எல் நசீருக்கும் வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

இதனடிப்படையில் அலிசாஹிருக்கு இன்னும் அதிகாரங்கள் வழங்கப்படுவதை அங்கிருக்கும் அதிகார அணியொன்று தடுக்க முனையும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பிடியை ஓங்கவைக்கும் பொருட்டு பொத்துவில் தொகுதிக்கு மற்றுமொரு பிரதியமைச்சை வழங்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கட்சியின் தேவைப்பாடுகளை உணர்ந்து செயற்படுபவர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும் மக்களுடன் கலந்து செயற்ப்பட்டு வருகின்றமையை மேம்படுத்தும் எதிர்பார்ப்புடனும் தலைமை இத்தகைய முடிவினை எடுக்கும் நம்ப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

No comments