148 கிலோ கஞ்சாவுடன் சிலோன் சேகர் கைது - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 11, 2018

148 கிலோ கஞ்சாவுடன் சிலோன் சேகர் கைது

வேதாளை அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 148 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இராமநாதபரம் மாவட்டம் வேதளை அருகே கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக கியூபிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை, தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தினார். 

அப்போது மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையொட்டிய பகுதியில் சந்தேகத்திற்க்கு இடமாக நின்று மூன்று கார் பொலிஸாரைக் கண்டதும் வேகமாக காட்டுப்குதிகளுக்குள் சென்றது. இதனையடுத்து பொலிஸார் கார்களை குயவன்தோப்பு பகுதியில் வைத்து விரட்டி பிடித்தனர். 

இதில் பொலிஸாரின் வாகனம் சேதமடைந்தது. பின் சொகுசு கார்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ரூ 20 லட்சம் மதிப்பிலான 148 கிலோ உயர்தரமான கேராள கஞ்சாவை பறிமுதல் செய்த பொலிஸார் மூன்று சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். 

பல ஆண்டுகளாக பொலிஸாரால் தேடப்பட்டுவந்த பிரபல கடத்தல்காரர் சிலோன் சேகர் மற்றும் ராமேஸ்வரத்தைச சேர்ந்த விஸ்வநாதன், கோபுரத்தான புதுக்கோட்டைப்பகுதியசை சேர்ந்த கலக்தர்அலி உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்துள்ள கியூபிரிவு பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் முக்கிய கடத்தல்காரர் சிலோன் சேகர் சிக்கியிருப்பதால் இலங்கைக்கு கடத்த ராமநாதபுரம் மாவட்ட கடலோரபப்குதிகளில் போதைப் பொருள்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதணையில் பாதுகாப்பு வட்டாரங்கள் நேற்று முதல் ஈடுபட்டுவருகின்றனர் 

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages