பள்ளிவாசல்களில் இராணுவத்தினர்!!!

அம்பாறை மற்றும் கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் எதிரொலியினால் வவுனியா - செட்டிக்குளத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

அம்பாறை மற்றும் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் இன கலவரம் வவுனியாவிலும் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் இவ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இவ் இன கலவரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில்,
"சகல இனங்களுக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சமத்துவமாக வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், சட்டம் ஒழுங்கு பாகுபாடின்றி நிலை நாட்டப்பட வேண்டும்.
அத்தோடு முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவத்தை உடன் நிறுத்த வேண்டும். இதன் சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த ஜனாதிபதி மற்றும் சட்ட அமைச்சராக திகழும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments