Breaking News

சதிகளுக்கு அப்பால் சாணக்கியம்


- அபூ ஜாசி -
முஸ்லிம் காங்கிரஸ் மீதான பல் முனை தாக்குதல்கள் சதிகளில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் மீண்டுள்ள நிலையில் அதன் தூய வடிவை தக்கவைக்க பல நுணுக்கங்களைக் கையாள வேண்டியுள்ள அதேவேளை கட்சியின் மீதான தாக்குதல்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது. 

இந்நிலையில் மு.கா மீதான சதிகளும் தாக்குதல்களும் எந்தெந்த வடிவத்தில் இம்முறை அரங்கேறியது என்பதை வரையறைகள் எதற்குள்ளும் அடக்க முடியாதளவு மிகப் பலமாக அமைந்திருந்தது. இருப்பினும் சர்வ சாதாரணமாகவே இத் தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுத்திருந்தது என்பது மிகையல்ல. 

இத் தேர்தல் மூலமான இலக்கு : முஸ்லிம் காங்கிரசின் அடிமட்ட போராளிகள், இளைஞர்கள் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அரசியல் ரீதியில் எல்லாவகையான எதிர்ப்புக்களையும் சதிகளையும் சந்தித்துள்ளது. விசேடமாக முஸ்லிம் காங்கிரசால் பெரிதும் நம்பப்பட்ட  ஐக்கிய தேசிய முன்னணி என்ற அடையாளம் கொண்ட கூட்டுக் கட்சிகளுக்குள்ளான கழுத்தறுப்புக்களும், தொடர்ச்சியான இழுத்தடிப்புக்களின் மூலமாக கட்சியின் முக்கியஸ்தர்களையும், தலைமையையும் மிக அதிருப்தியான நிலைமைக்கு மாற்றி முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுத்தளத்தை உடைக்க முயற்ச்சிக்கின்றமை. 

அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன அவர்களை வெற்றி பெற வைக்க மிகவும் பாடுபட்டு முஸ்லிம் வாக்குகளின் பெரும் பான்மைக்கு காரணமாக இருந்த மு.கா வை ஒதுக்கி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரசுடன் மிக இறுக்கமான உறவொன்றின் மூலமாக மு.கா வை தோற்கடிக்க ஜனாதிபதி செயற்பட்டுள்ளார் என்பதுவும் சுதந்திரக் கட்சியுடனான உறவை துண்டிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளமை என தேசிய ரீதியில் எதிர்னடவடிக்கைகளை அமைத்துள்ளமை. 

இந்நிலையிலும் மு.கா பல இடங்களில் வெற்றி கண்டுள்ளமை முஸ்லிம் சமூகத்தினுள் அதன் தேவைப் பாடு உணரப்பட்டுள்ள விதம் என்றால் அது மிகையல்ல ....(தொடரும்) 

No comments