Comments System

header ads

க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படவுள்ளன. 

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இம்முறை பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, தஹம் பாடசாலை தொடர்பான இறுதிப் பரீட்சை இம்மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சைக்கு சுமார் 1 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

Post a Comment

0 Comments