எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் மஹிந்த - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 22, 2018

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் மஹிந்த


பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் மதியம் 1 மணிக்கு கூடியது. இதன்போது வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சபாபீடத்திற்குள் பிரவேசித்தார். அவரது ஆசனம் எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்திற்கு அருகிலேயே உள்ளது.  அதாவது எதிர்க்கட்சி தலைவர் ஆசன வரிசையின் அடுத்த ஆசன வரிசையின் முதல் ஆசனமாகும்.
எனினும் சபாபீடத்திற்குள் நுழைந்த மஹிந்த ராஜபக்ஷ தன்னை மறந்து எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்து நீண்ட நேரம் இருந்தார். இந்த சம்பவம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆளும் கட்சியினரின் அவதானத்தை ஈர்த்தது. கூட்டு எதிர்க்கட்சியினரும் இந்த விடயத்தை அறியாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தனர். எனினும் பின்னர்  படைகள சேவிதர் ஒருவர் வந்து அவருக்கு நினைவூட்டியவுடன் திடீரென எழுந்து சென்று அருகில் உள்ள தனது ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டார். 
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்கவும் சபை  முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்லவும் மஹிந்த ராஜபக்ஷவைநோக்கி நகைச்சுவையாக ஏதோ கூறினர்.   கூட்டு எதிர்க்கட்சியினரும் சிரித்துக் கொண்டிருந்தனர். 
அதன்பின்னர் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலையில் கைவைத்து சிரித்துக்கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages