Comments System

header ads

கண்டி சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்தது இதுதான்.!

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு தேவைப்படும் பட்சத்தில் 7 நாட்களுக்கு அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தெல்தெனிய மற்றும் திகன பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் பிரதமர் இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.
கண்டி - திகன, தெல்தேனிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறையை அடுத்து நேற்றையதினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பல்லேகல மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments