Breaking News

பொத்துவில் முஸ்லிம் காங்கிரஸ் வசம் ; சதிகள் முறியடிப்பு


பொத்துவில் பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் இன்று கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. உதவி உள்ளூராட்சி ஆணையாளரினால் ஒதுக்கப்பட்டிருந்த குறித்த நேரத்தில் கூட்டப்பட்ட புதிய உறுப்பினர்களைக் கொண்ட சபையில் கூடுதல் வாக்குகளைக் கொண்டே இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை தோற்கடிக்கும் நோக்கோடு களமிறங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றை தோற்கடித்தே முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர் வாசித் மீண்டும் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை முஸ்லிம் காங்கிரசில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. பதவிக்கான இழுபறியாக பார்க்கப்படும் இந்நிகழ்வை முஸ்லிம் சமூகம் எதிர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது 

No comments