Comments System

header ads

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கப் போவது யார் ?

ஆட்சியமைக்கப் போவது யார் ?

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல், முடிவுகள் அறிவிக்கப்பட்டும் தேர்தல் காலத்தை விடவும் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புடனேயே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதிலும் மெகா கேள்வி உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கப் போவது யார்.? என்பதுதான்.

அம்பாறை மாவட்டத்தில் தூய காங்கிரஸ் என மு.கா வை விட்டும் பிரிந்த ஹசனலி தலைமையிலான அணி, அமைச்சர் ரிஷாத்தின் தலைமையிலான மயில் கட்சியுடன் சேர்ந்து களமிறங்கி நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்களவு வாக்குகளை கைப்பற்றியுள்ளன. அதேவேளை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் கணிசமான வாக்குகளை மயில் பெற்றுள்ளது. 

இந்நிலையில் மாவட்டத்தின் பெரும்பான்மை வட்டாரங்களை மக்கள் ஆதரவுடன் வெற்றி கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க கூட்டு வெற்றி பெற்றும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை புதிய தேர்தல் நிலைமை தோற்றுவித்துள்ளது. 

இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தலை எதிர்வரப்போகும் தேர்தல் ஒன்றிற்கான களமாக பயன் படுத்தும் ஆவல் எல்லா கட்சிகளிடமும் உள்ளது. விசேடமாக அதாவுல்லாஹ் அவர்களின் தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் பயணிக்கவுள்ளமையினால் அக்கட்சி சார்பிலாக தனது தளங்களை உறுதிப் படுத்திக் கொள்ள முனைகின்றது. 

அம்பாறையில் ஆழக்கால் பாதிக்கும் மயில் கட்சி உள்ளூரட்சிகளின் அதிகாரங்களை கைகளில் எடுப்பதன் மூலமாக தனது பலத்தை நிரூபித்து, எதிர்வரும் மாகாண, பொதுத் தேர்தல்களை சமாளிப்பதற்கான முஸ்தீபுகளை முன்னெடுத்துள்ளது. 

முஸ்லீம்கள் முழு இலங்கையிலும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்ற அசுர நிலையில், மு.கா வின் தலைமை மிக இறுக்கமான நிலையில் இருப்பதாகவே உணர முடிகிறது. அதேவேளை ஆட்சித் தரப்பின் உண்மை நிலையை பட்டவர்த்தனமாக வெளிக் கொணர்ந்துள்ளமை நிச்சயமாக மு.கா வின் தலைமையுடன் ஆட்சியாளர்கள் மகிழ்ச்சியாக தொடர்வதற்கான காரணமாக இருக்க முடியாது. 

இந்நிலையில் எதிர்கட்சி ஆசனங்களை மு.கா உள்ளூராட்சிகளில் நிரப்பவேண்டிய ஒரு கடப்பாடும் இங்கே எழுந்துள்ளது. 

எது எவ்வாறிருப்பினும் எதிர்வரும் தேர்தல்களில் பல புதிய கூட்டுக்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளமை நிதர்சனமாகும். 

Post a Comment

0 Comments