Breaking News

வீதி அபிவிருத்திப் பணிகளை எ.எல்.எம். நசீர் எம்.பி பார்வையிட்டார்




-அன்வர்.ஜே.நௌஷாத்-
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் உள்ளக கட்டுமான அபிவிருத்திப்பணிகளை திட்டமிட்ட முறையில் செயற்படுத்துவதற்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம். நசீர் அவர்களினால் முன் மொழியப்பட்டுள்ள "நவீன அட்டாளைச்சேனை" செயற்றிட்டத்தின் கீழ் உள்ளக வீதிகளை தரமான வீதிகளாக மாற்றுதல் எனும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இன்று பல அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்ற நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

 

அந்த வகையில்,  கடந்த கிழக்கு மாகாணசபையில் அமைச்சராக இருக்கும் போது தனது முயற்சியினால் வீதி அபிவிருத்தி திணைக்களதின் ஊடக இடம் பெறும் அட்டாளைச்சேனை அறபா வீதிக்கான காபட் இடும் வேலைகள் மற்றும்  நகர திட்டமிடல் அமைச்சின் நிதிஒதுக்கீட்டில் அட்டாளைச்சேனை ஷரீப் ஹாஜியார் வீதிகான காபட் இடும் வேலைகள் போன்றவற்றை  இன்று (22.03.2018) நேரில் சென்று பார்வையிட்டார் பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ ஏ.எல்.முஹமட் நசீர் அவர்கள் சென்று பார்வையிட்டதுடன் அப்பிரதேச மக்களின் கருத்துக்களையும் அறிந்து கொண்டார். 

No comments