Breaking News

ஹதரே கல்லிய குழுவின் பிரதான உறுப்பினர் கைது (படங்கள்)

களுத்தறை மாவட்டத்தின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ´ஹதரே கல்லிய´ குழுவின் பிரதான உறுப்பினர் ஒருவர் வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதும்கம்மான எனும் பிரதேசத்தில் வைத்து துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 


பல பிரதேசங்களில் உள்ள வீடுகள், கடைகள், மற்றும் தனியார் நிறுவனங்களில் இந்த குழுவினர் கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இந்த குழுவினர் சில தினங்களுக்கு முன்னர் மீகஹதென்ன எனும் பிரசேத்தில் உள்ள வீடொன்றிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இவரிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி 75,000 ரூபா பெறுமதியானது என்றும் இந்த துப்பாக்கியை வைத்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

சந்தேகநபரை மதுகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments