Breaking News

பாராளுமன்றில் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் நசீர் எம்.பி ஆக்ரோஷம்

பாராளுமன்றில் கௌரவ. எ.எல்.எம் நசீர் எம்.பி அவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பிலாக ஆக்ரோசமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பிலாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் உள்ளே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்திய போதே இவ்வாறான கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 
அரசின் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பிலான விவகாரங்கள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என வலியுறுத்தும் முகமாக கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்கள் மூலமாக முன் வைக்கப்பெற்ற விசேட விவாதம் ஒன்றின் போதே இவ்வடையாள எதிர்ப்பு இடம்பெற்றது.

முஸ்லிம்களை பாதுகாப்பதில் அரசினதும் சட்ட ஒழுங்கு அமைச்சினதும் பங்களிப்பு தொடர்பிலாக சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது என கௌரவ.எ.எல்.எம் நஷீர் எம்.பி கூறியதும் அரச தரப்பு எம்.பிக்கள் மற்றும் பலரின் எதிர்ப்புக்களையும் மீறி பாராளுமன்றில் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார். 

No comments