About Me

header ads

இலங்கை தொடர்பில் ஜெனீவா அதிருப்தி ; ஜெனீவாவில் என்ன நடந்தது ?

ஜெனிவா கூட்­டத்­தொ­டரின் இலங்கை தொடர்­பான முக்­கிய அமர்­வொன்று கடந்த புதன்­கி­ழமை நடை­பெ­று­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தன. ஜெனிவா மனித  உரிமை பேரவை வளா­கத்தில்   முகா­மிட்­டி­ருந்த பாதிக்­கப்­பட்ட மக்­களின்  பிர­தி­நி­திகள்,   அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச மனித  உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், புலம்­பெயர் அமைப்­புக்­களின் முக்­கி­யஸ்­தர்கள்,  தென்­னி­லங்கை   சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் என பல்­வேறு தரப்­பி­னரும்  என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதை   மிகவும் எதிர்­பார்ப்­புடன்  பார்த்­துக்­கொண்­டி­ருந்­தனர். 

ஜெனிவா வளாகம் பர­ப­ரப்­பா­கவே   காணப்­பட்­டது.  ஐக்­கிய நாடுகள் மனித  உரிமை ஆணை­யாளர்   செய்ட் அல் ஹுசைன்  என்ன கூறப்­போ­கின்றார்   என்ற எதிர்­பார்ப்பு அனைவர் மத்­தி­யிலும் காணப்­பட்­டது.    ஒரு­சிலர்  செய்ட் அல் ஹுசைன்  அர­சாங்­கத்­துக்கு அழுத்தத்தை பிர­யோ­கிக்­க­மாட்டார் என்றும்  ஒரு­சிலர் கடும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்பார் என்றும் கூறிக்­கொண்­டி­ருந்­தனர்.    முழு ஜெனிவா வளா­கமே  ஹுசைனின் அறிக்­கையை எதிர்­பார்த்து காத்­துக்­கொண்­டி­ருந்­தது. 
2015 ஆம் ஆண்டு   ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை  தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட     பிரே­ர­ணையை  இலங்கை  எவ்­வாறு  அமுல்­ப­டுத்­து­கின்­றது, அதன் முன்­னேற்றம் எவ்­வாறு காணப்­ப­டு­கின்­றது என்­பது குறித்த மதிப்­பீட்­டையும் அடுத்­த­கட்­ட­மாக   ஐ.நா. மனித உரிமை பேரவை என்ன செய்­யப்­போ­கின்­றது என்­பது தொடர்­பான அறி­விப்­பை­யுமே  செய்ட்  அல் ஹுசைன் இலங்கை தொடர்­பாக  வெளி­யி­டு­வ­தற்கு   ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. 
தொடர்ந்து பல்­வேறு  எதிர்­பார்ப்­புகளுக்கு மத்­தியில்  ஜெனிவா நேரம் 3 மணி­ய­ளவில் இலங்கை தொடர்­பான விவாதம் ஆரம்­ப­மா­னது.  செய்ட் அல் ஹுசைன் முதலில் விவா­தத்தை ஆரம்­பித்து   இலங்கை தொடர்பில்   உரை­யாற்­றுவார்  என எதிர்­பார்த்த தரப்­பி­ன­ருக்கு ஏமாற்­றமே கிட்­டி­யது.  காரணம் அவ் விவா­தத்தில்  தனிப்­பட்ட கார­ணங்­களை முன்­வைத்து  செய்ட் அல் ஹுசைன் கலந்­து­கொள்­ள­வில்லை. எனினும் ஐ.நா. மனித  உரிமை பேர­வையின்  பிரதி ஆணை­யாளர் கேட்  கில்மோர் அம்மையார் இலங்கை தொடர்­பான அறிக்­கையை   வெளி­யிட்டார்.  அதா­வது செய்ட் அல் ஹுசைன் இலங்கை தொடர்­பாக மதிப்­பீடு செய்து தயா­ரித்த அறிக்­கை­யையே   பிரதி  மனித உரிமை ஆணை­யாளர்  வெளி­யிட்டார். 
 அவ்வறிக்­கையில் எதிர்­பார்க்­கப்­பட்ட வகை­யி­லேயே இலங்கை தொடர்பில் கார­சா­ர­மான  விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.  அது­மட்­டு­மன்றி அதன்­பின்னர்  உரை­யாற்­றிய   அமெ­ரிக்கா, பிரிட்­டன் ஆகிய நாடு­களும்  இலங்கை தொடர்­பாக கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருந்­தன. அத்­துடன்   உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நஷ்­ட­ஈடு வழங்­குதல்,   மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்தல் போன்­வற்­றுக்­கான   ஐ.நா.வின்  விசே­ட  ஆணை­யாளர்  பப்லோ டி கிரீபின் உரையும்  இலங்கை தொடர்­பாக  கார­சா­ர­மாக அமைந்­தி­ருந்­தது.  முதலில்  செய்ட் அல் ஹுசைனின் அறிக்கை  பின்­வரும் விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்­தது. அதா­வது ஐக்­கிய நாடுகள்  சபை­யுடன் ஈடு­பாட்­டுடன் செயற்­படும்  இலங்­கையின்    செயற் பாட்டை வர­வேற்­கின்றோம்.   எனினும்   பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை    முன்­னெ­டுப்­பதில் இலங்கை   தாம­தத்தை கடை­ப்பி­டிக்­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.  மேலும் எதிர்­வரும் 2019 ஆம் ஆண்­டுக்குள் ஜெனிவா பிரே­ர­ணையை   இலங்கை  முழு­மை­யாக  அமுல்­ப­டுத்தும் என்­பது  சந்­தே­கத்­துக்குரி­ய­தாக  மாறி­யுள்­ளது. அத்­துடன் சட்­ட­மூலம்  நிறை­வேற்­றப்­பட்டு  20 மாதங்கள் கடந்தே காணாமல் போனோர் அலு­வ­லகம்  அமைக்­கப்­பட்­டுள்­ளமை  குறித்தும்  அதி­ருப்­தி­ய­டை­கின்றோம். 
அத்­துடன் காணி­களை மீள் வழங்­கு­வதில் தாமதம் நீடிக்­கின்­றது. காணி­களை தொடர்ந்து அப­க­ரித்தால் நம்­பிக்கையை கட்­டி­யெ­ழுப்­பு­வது கடி­ன­மாகும். மேலும் காணி­க­ளுக்­கான நஷ்டஈடுகள் சுயா­தீன பொறி­மு­றைகள் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். 
இவ்­வா­றி­ருக்க சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள் அத்­துடன் சர்­வ­தேச மனி­தா­பி­மான மீறல்கள் போன்­ற­வற்­றுக்­கெ­தி­ராக தண்­டனை வழங்­காமலிருக்கும் கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்டும். அத்­துடன் சர்­வ ேதச பங்­க­ளிப்­புடன் விசேட நீதி­மன்றம் ஒன்றை நிறுவி இவ்­வி­ட­யங்­களை ஆராய வேண்டும். இந் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டா­விடின் சர்­வ­தேச நியா­யா­திக்கம் என்ற மாற்­று­வ­ழியை ஆரா­யு­மாறு உறுப்­பு­நா­டு­களை கோருவோம். அத்­துடன் அண்­மையில் இலங்­கையில் இடம்­பெற்ற சிறு­பான்மை மக்கள் மீதான இனரீதி­யான தாக்­குதல் குறித்து நாம் கவலையடை­கிறோம். 
கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்களுக்கு எதி­ரான தாக்­கு­த­லினால் 12 நாட்களுக்கு அவ­ச­ர­கால நிலையை கொண்டு வர நேர்ந்­தது. சித்­தி­ரவ­தைகள் தொடர்­வ­தா­கவும் மனித உரிமை காப்­பா­ளர்­களை கண்­கா­ணிப்­பது தொடர்­பா­கவும் அறிக்­கை­யி­டப்­ப­டு­கி­றது.
எப்­ப­டியும் இலங்­கையின் இந் நிலைமை தொடர்­பிலும் நல்­லி­ணக்கம் பொறுப்­புக்­கூறல் குறித்தும் ஐ.நா. மனித உரிமை பேரவை அவ­தா­னத்­து­டன்  இருக்க வேண்டும் என கோரு­கிறோம்.   இவ்­வாறு  மிகவும் கார­சா­ர­மான வகையில் செய்ட் அல் ஹுசைனின் அறிக்கை அமைந்­தி­ருந்­தது. குறிப்­பாக   2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­துக்குள் இலங்கை அர­சாங்கம்  பொறுப்­புக்­கூ­றலை  முன்­னெ­டுக்­குமா என்ற சந்­தேகம் தமக்­கி­ருப்­ப­தா­கவும்  அர­சாங்­கத்தின் மீது   நம்­பிக்கை வைக்க முடி­யாதநிலை  காணப்­ப­டு­வ­தா­கவும்  ஹுசைனின் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. 
இந்­நி­லையில் இவ் விவா­தத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த  இலங்கை சம்­பந்­தப்­பட்ட அனைத்துத் தரப்­பி­னரும்  செய்ட் அல் ஹுசைனின்  அறிக்கை தொடர்பில் ஓர­ளவு  திருப்தி அடைந்­ததை  காண­மு­டிந்­தது.  உட­ன­டி­யா­கவே இலங்கை சார்­பாக  இவ் விவா­தத்தில் பதி­ல­ளித்து உரை­யாற்­றிய  வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன  இலங்­கை­யா­னது நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த  அர்ப்­ப­ணிப்­புடன் இருப்­ப­தாக   குறிப்­பிட்டார். அத்­துடன் இலங்­கையில் சட்டம் ஒழுங்கு சரி­யாக செயற்­ப­டு­கி­றது. மனித உரிமையை பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்றோம். காணாமல் போனோர் குறித்து ஆராய அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 70 வீத­மாக காணிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. நஷ்ட ஈடுகள் வழங்கும் அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. பயங்­க­ர­வாதம் தடைச்­சட்டம் நீக்­கப்­பட்டு புதிய சட்­ட­மூலம் கொண்டு வரப்­படும். அண்­மைய காலங்­களில் ஏற்­பட்ட வன்­மு­றைகள் தொடர்பில் கவலையடை­கிறோம். இதன் பின்னர் இவ்­வாறு வன்­மு­றைகள் ஏற்­பட இட­ம­ளிக்­கப்­பட மாட்டோம். இலங்­கையில் அனை­வரும் சம­உ­ரி­மை­யுடன் வாழ உரி­மை­யுள்­ளது. 2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கிறோம் என்று குறிப்­பிட்டார்.  இலங்கை அர­சாங்­கத்தின் பதி­லா­னது  வழ­மை­யாக ஜெனி­வாவில்   முன்­வைக்­கப்­படும் ஒரு விட­ய­மாக காணப்­பட்­டது.
 இந்­நி­லையில் விவாத்தில் உரை­யாற்­றிய   அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடு­களில் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டனர். அதா­வது ஐ.நா. பிரே­ர­ணையின் பரிந்­து­ரை­களை இலங்கை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். மனித உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்டும். காணாமல் போனோர் அலு­வ­லகம் சாத­க­மாக இருக்­கி­றது. ஆனால், தாம­த­மான நிலை­மையே எமக்கு அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­து­கி­றது. சிறு­பான்மை இன மக்கள் மீதான வன்­மு­றையை நிறுத்த வேண்டும். வைராக்­கிய பேச்சை நிறுத்த வேண்டும்.  அதி­கார பர­லா­வக்­கலை முன்­னெ­டுத்து காணாமல் போனோர் மீதான உண்­மையை அறிய வேண்டும் என்று பிரிட்டன் மற்றும் அமெ­ரிக்க நாட்டின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­டனர். 
சர்­வ­தேச நாடு­களின் அறிக்­கை­களைப் பொறுத்­த­வ­ரையில்  அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­களே முதன்மை பெற்­றி­ருந்­தன.   குறிப்­பாக சிறு­பான்மை மக்­க­ளுக்ெகதி­ரான வன்­மு­றை­களை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­மாறும் அது  தொடர்பில் சூத்­தி­ர­தா­ரி­களை சட்­டத்தின் முன் கொண்­டு­வ­ரு­மாறும்   சர்­வ­தேச நாடுகள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன. 
இத­னை­ய­டுத்து  இலங்­கைக்கு விஜயம்  மேற்­கொண்­டி­ருந்த ஐ.நா.வின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்  இலங்கை தொடர்­பாக   சிறப்பு அறி­விப்­பொன்றை வெளி­யிட்டார். அதில் ஒரு முக்­கிய விட­யத்தை   சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.  அதா­வது 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து நான் இலங்­கை­யுடன் தொடர்ந்து செயற்­பட்டு வரு­கின்றேன். பல்­வேறு விஜ­யங்­களை அங்கு நான் மேற்­கொண்­டி­ருக்­கின்றேன்.  கடந்­த­வ­ரு­டமும்   இலங்­கைக்கு நான் விஜயம் செய்­தி­ருந்தேன். அது­தொ­டர்­பான எனது அறிக்­கையை   எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம்   ஜெனி­வாவில் சமர்ப்­பிப்பேன்.  
  பழைய விட­யங்கள் அனைத்­தையும் இங்கு  நான் பேச­வில்லை.மாறாக இருவாரங்­க­ளுக்கு முன்னர் இலங்­கையில் இடம்­பெற்ற  முஸ்லிம் சமூ­கத்­தினர் மீதான தாக்­குதல் குறித்து  சில விட­யங்­களை   முன்­வைக்­கின்றேன். 
ஒரு பரந்­து­பட்ட ரீதி­யான   நிலை­மா­று­கால நீதி   குறித்த  பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை  முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென   நான்  ஏற்­க­னவே  பரிந்­துரை முன்­வைத்­தி­ருக்­கின்றேன்.  குறிப்­பாக  2015 ஆம் ஆண்டு  ஜெனிவா மனித  உரிமை பேர­வையில்  நிறை­வேற்­றப்­பட்ட 30/1 என்ற தீர்­மா­னத்தின் கீழ் இப் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை  முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யது    அவ­சி­ய­மாகும். 
காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்­துக்கு   ஆணை­யா­ளர்­களை நிய­மித்­துள்­ளமை  எதிர்­பார்ப்­புக்­கான ஒரு சமிக்­ஞையை வெளிக்­காட்­டி­யுள்­ளது.  அதில் சில கேள்­வி­களும் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக   தாம­தமும் காணப்­ப­டு­கின்­றது.   இவ் அலு­வ­லகம் தொடர்பில்  ஈடு­பாட்­டுடன் செயற்­ப­டு­மாறு நான் அனைத்துத் தரப்­பி­ன­ரிடம் கோரிக்கை விடுக்­கின்றேன்.   
காணா­மல்­போனோர் அலு­வ­ல­க­மா­னது ஒரு  ஆரம்பம் மட்­டு­மே­யாகும். இலங்­கையில்   அனைத்து  சமூ­கத்­தி­ன­ரிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளனர். 10 வரு­டங்­க­ளுக்ெகாரு முறை  ஏதோ வகையில் இடம்­பெ­று­கின்ற வன்­மு­றை­க­ளினால்   சமூ­கங்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன.   இலங்­கையில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யா­னது அர­சியல் மய­மாக்­கப்­பட்­டுள்­ளது.   
இன­வன்­மு­றைகள் இலங்­கையில் அவ்­வப்­போது இடம்­பெற்று வரு­கின்­றன.  1971 ஆம் ஆண்டு மற்றும் 1987, 1989 ஆம் ஆண்­டு­களில்   வன்­மு­றை ­சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன.   இதில் பாதிக்­கப்­பட்ட அனைத்து மக்­க­ளுக்கும்  உண்­மையைக் கண்­ட­றி­யவும் நீதியைப் பெறவும்  நஷ்­ட­ஈடு  பெறவும் உரிமையுள்­ளது. அத்­துடன் முழு சமூ­கமும்  மீள் நிக­ழா­மையை  அனு­ப­விப்­ப­தற்கு உரிமை கொண்­ட­வர்கள்.  அத்­துடன் குற்­ற­வா­ளி­க­ளுக்கு  தண்­டனை வழங்­கப்­ப­டாமை நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.   தற்­போது இலங்­கையின்   தலை­மைத்­துவம்  அர­சியல்  தலை­மைத்­துவம்    எதிர்க்­கட்­சி­யினர்,  மதத்­த­லை­வர்கள்,   இரா­ணு­வத்­தினர்,  உள்­ளிட்ட பல்­வேறு தரப்­புக்­க­ளி­டமும் நான்   ஒரு கேள்­வியைக் கேட்­கின்றேன். அதா­வது மூன்று மாதங்கள் அல்­லது இரண்டு வரு­டங்கள்  அல்­லது ஏழு வரு­டங்­களின் பின்னர்  உங்கள் சமூ­கத்தின் தாயொ­ருவர் உங்­க­ளிடம் வந்து எனது மகன் கடத்­தப்­ப­டு­வ­தற்கு அல்­லது கொல்­லப்­ப­டு­வதை தடுப்­ப­தற்கு நீங்கள் என்ன செய்­தீர்கள் என்று கேட்டால் அவ­ருக்கு   நீங்கள் கூறும் பதில் என்ன?
2015ஆம் ஆண்டு  நான்  முன்­வைத்த விட­யங்­களின் படி  அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக சரி­யான நடவ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்தால் பிராந்­தி­யத்­தி­லேயே நிரந்­தர சமா­தானம் கொண்ட நாடாக இலங்கை சாத­னை ­ப­டைத்­தி­ருக்­கலாம்.  எப்­ப­டி­யி­ருப்­பினும் இலங்­கைக்கு தீர்க்­க­மான மற்றும் உற்­சா­க­மான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. இலங்கை மக்கள் அனை­வரும் தாம்   சமத்­து­வ­மிக்­க­வர்கள் மற்றும் அடிப்­படை உரி­மை­யைக்­கொண்­ட­வர்கள் என்­பதை உணர்த்தும் வகை­யி­லான   அர­சி­ய­ல­மைப்பு  இலங்­கைக்கு தேவைப்­ப­டு­கின்­றது.  தொடர்ந்தும் இதற்­காக காத்­தி­ருக்­க­வேண்டாம். பெரு­மை­யா­கவும்   அழுத்த ரீதி­யா­கவும்  இச்  செயற்­பாட்டை முன்­னெ­டுங்கள். அந்த  செயற்­பாட்டை விரை­வாக அமுல்­ப­டுத்­துங்கள்  என்று  பப்லோ டி கிரீப் தனது இலங்கை குறித்த அறிக்­கையில்  குறிப்­பிட்­டி­ருந்தார். 
இம்­முறை  இலங்கை பிரச்­சினை தொடர்பில்  மக்கள் எதிர்­பார்த்த  பதில் முழுமையாக  ஜெனிவாவில் கிடைக்காவிடினும்  ஓரளவு  பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தி அடையும் வகையில் ஐ.நா. மனித உரிமை பேரவை  நகர்வுகளை முன்னெடுத்துள்ளமை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.   பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில்  சர்வதேச  சமூகத்தையும் ஐ.நா. மனித உரிமை  பேரவையையும் மட்டுமே  நம்பியிருக்கின்றனர். ஜெனிவாவில் கூடியிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களிலிருந்து இதை   அறிய முடிந்தது. 
எனவே அரசாங்கம்  இந்நிலைமை குறித்து கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும். அதேபோன்று  பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்பதை சர்வதேச  சமூகமும் ஐக்கியநாடுகள் சபையும் புரிந்துகொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள்  மனித உரிமை பேரவையின் வெறுப்பை இலங்கை அரசாங்கம் சந்தித்துள்ளதாகவே தெரிகின்றது. 
கடந்த மூன்றுவருடகாலத்தில் இலங்கைக்கு முழுமையாக   ஆதரவளித்து வந்த ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தற்போது அழுத்தம் பிரயோகிக்க  ஆரம்பித்துள்ளது. எது எப்படியிருப்பினும் மற்றுமொரு ஜெனிவா கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கிறது.  இலங்கை தொடர்பான விவாதமும் முடிவடைந்திருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக நீதிக்காக  ஏங்கிக்கொண்டே இருக்கின்றனர். அடுத்த கட்டத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை என்ன செய்யப்போகின்றது என்பதே அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வியாகும்.  அதற்கு யார்  பதிலளிப்பார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். 
(எஸ்.ஸ்ரீகஜன்)

Post a Comment

0 Comments