புதிய மாகாண தேர்தல் முறைமை தொடர்பில் நாம் கடுமையான எதிர்ப்பை காட்டுவோம்; ரவூப் ஹக்கீம்


மாகாண சபை தேர்தலை புதிய முறைமையிநூடாக நடாத்த முஸ்லிம் காங்கிரஸ் தனது முழுமையான எதிர்ப்பை வெளியிடும் என தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே பாராளுமன்றில் இச்சட்ட மூலம் தொடர்பில் தனது காட்டமான எதிர்ப்பையும், பிரதமருடன் மிக முரண்பாடான முடிவோன்றினையும் கொண்டிருந்தது. இருப்பினும் சட்ட மூலம் தொடர்பிலாக நாம் ஆதரவளித்திருந்தோம். இந்நிலையில் முஸ்லீம் சமூகத்திற்க்கெதிரான முறையில் முடிவுறுத்தப் படுகின்ற நிலைமையினை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அங்கீகரிக்காது.

பாராளுமன்றில் நாம் புதிய மாகாண சபை தேர்தல் முறைமையிலுள்ள பிழையான விவகாரங்கள் தொடர்பில் உரை ஒன்றினை நிகழ்த்தும் போது ஏனைய கட்சிக்காரர்களும், விசேடமாக கூட்டு எதிர்கட்சியினறும் நமது நிலைப்பாட்டுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் நாம் நமது சமூகத்திற்க்கான பயணத்தில் மிக உறுதியாக பயணிக்க தயார் நிலையிலேயே இருக்கிறோம். எனவும் கூறினார். 

Post a Comment

0 Comments