Comments System

header ads

ஒலுவில் கலந்துரையாடலில் ரணில் தீர்வு ; ஹக்கீமுக்கு வெற்றி ; மக்கள் வாழ்த்து



அம்பாறையில் நடைபெற்ற திட்டமிட்ட இன வன்முறைகளுக்கு எதிராக பிரதமரும், சட்ட ஒழுங்குகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கே அவர்களினால் இன்று பல தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. 

ஒலுவில் துறைமுக ஓய்வு விடுதியில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போதே இவ்வாறு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அம்பாறை பள்ளி வாசலுக்கு நிரந்தர பாதுகாப்பு சாவடி மற்றும் கலவரத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை, மற்றும் சட்டத்தை அமுல் நடாத்த தவறிய பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை என பல தீர்மானங்கள் எடுக்கப் பெற்றுள்ளன. 

சுமூகமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இத்தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று கள நிலைமைகளை அறிந்து தீர்வொன்றினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவே பிரதமர் அழைக்கப் பட்டிருந்தமை விஷேட அம்சமாகும். 

Post a Comment

0 Comments