அட்டாளைச்சேனை பிரதேச சபையில் எவ்வாறு ஆட்சி அமையலாம்

இழுபறியாக இருந்து வரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆட்சி விடயமானது  எதிர்வரும் 28ம் திகதி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் முடிவுருத்தப்பட இருக்கின்றது.  முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த வாரத்தில் தமது சத்தியப் பிரமாணங்களையும் முடித்துக் கொண்டுள்ளன.

இந்நிலையில் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் அடிப்படையில் மொத்தமாகவுள்ள 11 வட்டாரங்களில் 8இனில் முஸ்லிம் காங்கிரசும், 1 வட்டாரத்தில் தேசிய காங்கிரசும், 1 வட்டாரத்தில் அ.இ.மு.க வும், 1 வட்டாரத்தில் பொதுஜன பெரமுன வும் பெற்றுள்ளன இதில் போனஸ் ஆசனங்களாக தே.கா - 5, அ.இ.ம.க. - 2 என வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடுதல் வாக்குகளை பெற்ற கட்சியான மு.கா தனியே ஆட்சியமைப்பதற்கான ஆசனங்கள் இல்லாத நிலை தோன்றியுள்ளது. அதேவேளை எதிர்கட்சிகள் கூட்டாக ஆட்சியமைக்கவும் வாய்ப்புகளுண்டு.

வாய்ப்பு - 01
SLMC + ACMC - எதிரணி தேசிய காங்கிரஸ்
வாய்ப்பு - 02
SLMC+ NC - எதிரணி அ.இ.ம.க.
வாய்ப்பு - 03  
SLMC + SLPP = அ.இ.ம.க + தேசிய காங்கிரஸ்
வாய்ப்பு - 04
ACMC+NC+ SLPP  - எதிரணி மு.கா

இந்த நான்கு வாய்ப்புகளையும் தாண்டி அட்டாளைச்சேனை உள்ளூராட்சி சபையில் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன தனித்தனியாக இயங்கும் பட்சத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும் அதுவும், சுழற்சி முறையிலான தவிசாளர் பதவிகள் வழங்கப்படலாம்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரசில் சிறிதளவான சறுக்கல் இருப்பினும் பொதுத்தேர்தலில் அவற்றை சரி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. அதேவேளை ஒற்றை ஆசனத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் போட்டியிடும் மயில் கட்சியினையும், தமிழரசுக் கட்சியினையும் தாண்டி வாக்கெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும், இந்நிலையில் தேசிய காங்கிரஸ் உள்ளூரட்சிகளில் மயிலுடன் இணைவது அரசியல் தற்கொலையாகும்.

Post a Comment

0 Comments