கண்டிக்கலவரம் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் ; சட்ட ஒழுங்கு அமைச்சர் மத்தும - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 16, 2018

கண்டிக்கலவரம் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் ; சட்ட ஒழுங்கு அமைச்சர் மத்தும


(எம்.சி.நஜிமுதீன்)
கண்டியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையானது அடிப்படைவாத குழுக்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என்பது ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக பொது நிர்வாக முகாமைத்துவ, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிதம்துள்ளார்.
முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உட்பட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. 
அதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு  போதிய பாதுகாப்பு வழங்கத் தயாராகவுள்ளோம். எனவே எதிர்காலத்தில் இது போன்ற துரதிஷ்ட சம்பவங்கள் இடம்பெறுவதற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லை. 
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக தராதரம் பாராது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் சிலர் அரசின் பக்கம் விரல் நீட்டுகின்றனர். எனினும் அதில் எவ்வித உண்மையும் கிடையாது. மாறாக அரசியல் நோக்குடன் செயற்படுகின்ற சிலர் இதன் பின்னணியில் உள்ளனர். ஆகவே அதற்கான முழுமையான அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அது தொடர்பிலான தகவல்களை வெளியிடுவோம்.
அச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இதுவரை 280 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவற்றின் மூலம் இந்த தாக்குதல் சமபவத்தின் பின்னணியை புரிந்துகொள்ள முடியும். அத்துடன் சில பிரதேசங்களில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அது சம்பந்தமாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages