ஞானசார தேரர் என்னுடன் வரவில்லை ; ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள தூதுக்குழுவினருடன் கலகொட அத்தே ஞானசார தேரர் இணைந்துள்ளதாக இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்திற்கு முன்னதாகவே கலகொட அத்தே ஞானசார  தேரர் தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ளார். 
ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் ஜப்பான் வாழ் இலங்கையர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இச் சந்திப்பில் ஜப்பானிலுள்ள பௌத்த விகாரைகளின் தலைமைத் தேரர்களுடன் ஞானசார தேரரும் சமுகமளித்திருந்தார். 
அந்நிகழ்வில் பெற்றுக் கொள்ளப்பட்ட சில புகைப்படங்களைக் கொண்டு , ஜனாதிபதியுடன் சென்றுள்ள தூதுக்குழுவில் கலகொட அத்தே ஞானசார தேரரும் இடம்பெற்றுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments