“சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பின்னடையும்" - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 12, 2018

“சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பின்னடையும்"


சமூகவலைத்தளங்கள் முடக்கம் தொடர்பில் அரசாங்கம் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேணடும். அவ்வாறில்லையெனில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாரிய எதிர்ப்பை அரசாங்கம் சந்திப்பதோடு நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக  பின்னடைவினை எதிர்கொள்ள வேண்டுமென அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர்களின் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சுபாசன அபயவிக்ரம தெரிவித்துள்ளார். 

மாலபேவில் அமையப்பெற்றுள்ள அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர் உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.                   இந்த நிலையினால் சுமார் 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதற்கு பிரதான காரணம் இவர்களின் பிரதான தொடர்பாடல் ஊடகங்களாக வைபர், வட்ஸ் அப் மற்றும் முகப்புத்தகம் போன்றன  காணப்படுகின்றன. 
நாட்டின் தேசிய தேவைகளுக்காக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுப்படுபவர்களின்  தொடர்பாடல் உரிமையை கைகொள்வது மற்றும் பாதிப்பை ஏற்படுத்துவது பாரிய  குற்றமாகும். 
இந்த சமூக வலைத்தளங்களினூடாகவேஇவர்களது உறவுகள் அனைத்தும் தொடர்புகொள்கின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக இவர்கள் அசௌகரிய நிலையினை சந்தித்துள்ளனர். 
சமூக வலைத்தளங்களை தவறான முறைகளில் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் தவறு செய்பவர்களை தண்டிப்பதற்கு பதிலாக இலட்சகனக்கான மக்களின் தேவையை தடைசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடாகும். 
அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் விரைந்து கவனம் செலுத்தாவிட்டால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் தொடர்ச்சியான பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படும்            அதே சந்தர்ப்பத்தில் வைபர் வலைத்தளத்தை பயன்படுத்தும் பிரதான ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாக காணப்படுகின்றது. 
இலங்கையில் 59 இலட்சம் மக்கள் முகப்பு  புத்தகத்தையும், 8 இலட்சம் மக்கள் கீச்சகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். 
இந்நிலையில் தொடர்ச்சியான இந்த சமூக வலைத்தளங்களின் முடக்கம் தொடருமானால் நாட்டின் பொருளாதாரம் தொடர் பின்னடைவினை எதிர்நோக்க வேண்டிய சூழல் தோற்றம் பெறும் என தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages