மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு 36 ஆசனங்கள் ; ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 31, 2018

மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு 36 ஆசனங்கள் ; ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு



மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுனர்  ரோஹித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொணட இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த 36 உறுப்பினர்கள் இதன்போது சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் அதன் பிரதியினையும் பெற்றுக்கொண்டனர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண  முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.சலீம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் கே.சித்திரவேல், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பிரதித் தலைவர் நா.திரவியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages