2 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள், இராணுவ கோப்ரலுக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 22, 2018

2 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள், இராணுவ கோப்ரலுக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

கொலை, கொள்ளை உட்பட 5 குற்றங்களை புரிந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவர் மற்றும் இராணுவ கோப்ரல் ஆகியோரை குற்றவாளிகளாக இனம்கண்ட யாழ் மாவட்ட நீதிபதி மா. இளஞ்செழியன் மூவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி சங்கானை முருகமூர்த்தி ஆலய குருக்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ரி.56 ரக துப்பாக்கியால் குருக்களை சுட்டுக்கொலை செய்தமை, வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்தமை குருக்களின் மகன்மார் இருவரையும் சுட்டு படுகாயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை புரிந்த இரு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் இராணுவ கோப்ரல் ஆகிய மூவருக்கு எதிராகவும் சட்டமா அதிபரால் யாழ்.மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் யாழ். மேல்நீதிமன்றில் வழங்கப்பட்டது.
இதன்படி கொலைக்குற்றச்சாட்டு, கடும் காயத்தை விளைவித்தமை, கொள்ளையடித்தமை உட்பட 5 குற்றச்சாட்டுக்களிலும் குறித்த மூவரும் குற்றவாளிகள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்ததுடன் இம் மூவருக்கும் ஆயுள் தண்டனையும்  20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவறின் 18 மாத கடூழியச்சிறையும் 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 2 வருட கடூழிச்சிறையும் அத்துடன் குறித்த மூவருக்கும் மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages