ஓட்டமாவடி உள் வீதியின் அவல நிலை; பிரதி அமைச்சர் அமீர் அலி பாராமுகம் ஏன் ? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 27, 2018

ஓட்டமாவடி உள் வீதியின் அவல நிலை; பிரதி அமைச்சர் அமீர் அலி பாராமுகம் ஏன் ?

-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

(வீடியோ).,ஓட்டமாவடி B/2 வட்டார மூத்தவன் போடியார் வீதியின் அவல நிலைக்கு முற்று புள்ளி வைப்பாரா புதிய உறுப்பினர் ஹாமிட் மெளலவி.?
வீட்யோ வீதிக்கு நேரடியாக இறங்கிய புதிய உறுப்பினர் :- www.youtube.com/watch?v=O-p2A39kaFk&feature=youtu.be

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குற்பட்ட B/2 வட்டாரத்தில் உள்ள மூத்தவன் போடியார் வீதியானது அன்று தொடக்கம் இன்று வரை கேட்பார் பாற்பார் அற்ற நிலையிலே இருந்து வருகின்றது. இதனால் மழை காலங்களில் மக்கள் அசெளகரியத்திற்கு உள்ளாகின்ற நிலைமையானது நேரடியாக அவ் வீதிக்கு சென்று பார்க்கின்ற பொழுதுதான் இப்படியுமா பாராளுமன்ர உறுப்பினர் பிரதி நிதித்துவபடுத்துகின்ற நடு ஊரிலே வீதிகள் இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

இது ஒரு புறம் இருக்க.. கடந்த காலங்களில் ஓட்டமாவடி பிரதேச சபையினை பிரதி நிதித்துவபடுத்திய தவிசாளர்கள் ஏன் குறித்த மூத்தவன் போடியார் வீதியினை செப்பனிட்டு அவ்வீதியினை அண்டி வாழக்கூடிய மக்களுடைய அன்றாட தேவைகளை சிரமமின்றி நிறைவேற்றி கொள்ளும் வகையில் சீர் செய்து கொடுக்க வில்லை என்பதனை இங்கு கவனத்தில் எடுக்க வேண்டிய விடயமாக பார்க்க வேண்டி உள்ளது. அத்தோடு இதற்கு பிறகு ஓட்டமாவடி பிரதேச சபையினை கையில் எடுக்க இருக்கின்ற அதிகாரமிக்க உறுப்பினர்களுடைய உடனடி நடவடிக்கையாகவும் இருக்கின்றது.

அந்த வகையில் தற்பொழுது கிழக்கு மாகணத்தில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால் குறித்த வீதியானது தற்பொழுது பெரிதும் மழை நீரினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதை நேற்று 26.02.2018 நேரடியாக சென்று பார்வை இட்ட புதிதாக B/2 வட்டரத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஹாமிட் மெளலவி குறித்த வீதியானது ஏன் இது வரைக்கும் அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கின்றது என்பதற்கான காரணங்களை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் குறித்த வீதியினை வட்டாரத்துக்கான புதிய உறுப்பினர் என்ற வகையில் மிக விரைவில் அதற்கான தீர்வினை பெற்றுத்தருவாதாகவும் ஊடகங்களுக்கு வாக்குறுதி அளித்தார். எது எவ்வாறாக இருந்தாலும் கல்குடா பிரதேசத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ர உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி குறித்த விடயத்தில் துரித கதியுடன் செயற்பட்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே குறித்த வீதியினை அண்டி வாழுக்கின்ற மக்களுடைய வேண்டுகோளாக இருக்கின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages