Comments System

header ads

அட்டாளைச்சேனையில் மு.கா பெண் வேட்பாளரின் வீடு தாக்கப்பட்டது


அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான முஸ்லிம் காங்கிரசின் பட்டியல் வேட்பாளர் (அனைத்து விளையாட்டுக்கழக தலைவர் ஹம்சா சனூசின் மகள்) ஒருவரின் வீடு இன்று இன்று அதிகாலை 3.00 மணியளவில் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. 

குறித்த வீட்டில் பெண் வேட்பாளர் இல்லாத நிலையில், அவரது வீட்டின் முன் கதவினை உடைத்து திறந்த காடைக்கும்பல் தமது கைவரிசையை காட்டியுள்ளதாகவும், அதில் சிலரை இனங் கண்டுள்ளதாகவும், அக்கரைப்பற்று போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இவ்வட்டாரத்தில் மு.கா ஆதரவு ஐக்கிய தேசிய கட்சியில் பொத்துவில் தொகுதி ஐ.தே.க அமைப்பாளர் திரு.யூ.கே. ஆதம்லெப்பை களத்தில் உள்ளார் என்பதுவும், இவரது வெற்றிக்காக கணிசமான பங்களிப்பினை வேட்பாளரின் தந்தை ஹம்சா சநூஸ் வழங்கி வருகிறார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் ஆசனம் தற்போது அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சிகள் தமது தோல்வி நிலையினை உணர்ந்து கொண்டே இவ்வாறு அடாவடிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



Post a Comment

0 Comments