Comments System

header ads

இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யலாம்


கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதேநேரம் நாட்டின் ஏனைய பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஹம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் வடபகுதியின் சில பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.

Post a Comment

0 Comments