அட்டாளைச்சேனையில் கூட்டாட்சி - சொந்தச் செலவில் சூனியமா ? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 17, 2018

அட்டாளைச்சேனையில் கூட்டாட்சி - சொந்தச் செலவில் சூனியமா ?


-அபூஜாசி-
நடைபெற்று முடிந்தது உள்ளூராட்சி தேர்தல் என்றாலும் அதன் பாதிப்புகள் ஜனாதிபதி பிரதமர் என்று எல்லாப் பதவியனியினரின் பதவிகளையும் ஆட்டி அசைத்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. தேசியளவில் மஹிந்த ராஜபக்ஸவின்வெற்றி பல விடயங்களுக்கும் அழுத்தங்களுக்கும் காரனமாகியிருக்கின்றது.

இதேவேளை அட்டாளைச்சேனை உட்பட பல பிரதேசங்களில் எதிர்கட்சிகளின்  கூட்டாட்சி என்ற அடிப்படையில் தேசிய காங்கிரஸ் அணியினரும், அ.இ.ம.க வும் இணைந்து ஆட்சி அமைப்பதானது எவ்வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அலசும் போது,

எதிர்காலத்தில் பாராளுமன்ற இலக்கை அடைவதற்கான ஒரு தயார்படுத்தல் களமாகவே உள்ளூராட்சி தேர்தல் களம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலும் இரட்டை அங்கத்தவர் தொகுதியான பொத்துவிலில் தனியே ஒரு ஊரின் ஆதிக்கம் மாத்திரம் தேர்தலொன்றுக்கு போதுமானதல்ல. அந்த வகையில் நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் போன்ற ஊர்களில் கணிசமான ஆதிக்கத்தை தக்க வைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அட்டாளைச்சேனையில் ஆதிக்கம் செலுத்தும் மு.கா வினை எதிர்க்கும் நோக்குடன் தே.கா + அ.இ.ம.க வுடன் பிரதேச சபையின் கூட்டாட்சி என்பது தனியே அ.இ.ம.க வுக்கான தளத்தினை அமைப்பதாக அமையும்.

மு.கா வுக்கான ஆதரவுத்தளத்தில் குறைவுகள் ஏற்பட்டாலும், முன்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகளே உள்ளன. எனவே போட்டி இரு கட்சிகளுக்கே இருக்கும்  அதேவேளை, இந்நிலையானது தேசிய காங்கிரசின் வேட்பாளருக்கு  பாராளுமன்ற தேர்தலில் சவால்களை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனெனில் பாராளுமன்ற தேர்தலொன்றில் தொகுதிவாரி ஆயினும், விகிதாசாரமாயினும் கூடுதல் தனி வாக்கினை சேகரிக்க முடியாத நிலையை இது ஏற்படுத்தும். அத்துடன் அம்பாறையில் ஆழ ஊடுருவ நினைக்கும் அமைச்சர் ரிஷாத் அவர்களின் நிலைப்பாட்டில் அக்கரைபற்றை மையமாக கொண்ட தேசிய காங்கிரஸ் மும்முனைப் போட்டி ஒன்றின் போட்டியாளராக மாற வேண்டிய அவசியம் உருவாகும்.

எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் ஏதோவொரு தொகுதியினை பாராளுமன்ற தேர்தலுக்கான இலக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர், அமைச்சர் ரிஷாத் கொண்டுள்ளமையும் புலப்படுகிறது. அதிலும் நிந்தவூர் அவரது உறவுகள் கொண்ட ஊராகவும் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் அதற்கான களத்தை அமைத்திருப்பதாகவும் உணர முடிகிறது. நேரடியாக பொத்துவில் தொகுதியில் ரிஷாத் களமிறங்கும் வாய்ப்பு வரும் நிலையில், அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கூட்டாட்சி நிலை பெரிதும் அவருக்கு கைகொடுக்கும் அதேவேளை, தேசிய காங்கிரஸ் வேட்பாளர் கைசேதப் படவேண்டி ஏற்படலாம்.

பிரதேச சபையில் எதிர்கொள்ளும் கூட்டாட்சி நிந்தவூர் மற்றும் அட்டாளைசேனையில் கபினட் அமைச்சரான ரிஷாட்டினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரங்கள் மூலமாக  வாக்காளர்களிடம் ஊடுருவும் நிலையில்,  அதிகாரம் அற்ற கட்சித்தலைமை யொன்றின்  கூட்டாட்சி ஒப்பந்தம் என்பது சொந்தச் செலவில் சூனியமாகவே அமையும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages