Breaking News

பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம் நஸீர் உணர்ச்சியுடன் மக்களுக்கு நன்றி கூறினார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறினார் பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம். நஸீர்

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பல சிரமங்களுக்கும், தியாகங்களுக்கும் முகம் கொடுத்து வன்முறைகளை தாண்டியும் வாக்களித்த மக்களுக்கு நேரில் நின்று நாம் நன்றி கூறுகின்றோம் அத்துடன் நாம் நமது மக்களுக்கும் தலைமைக்கும் எல்லா விதங்களிலும் கடமைப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எ.எல்.எம். நசீர் தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், 

பதினோரு வட்டாரங்களையும், ஏழு விகிதாசார ஆசனங்களையும் கொண்ட கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எட்டு வட்டாரங்களை கைப்பற்றி, சுமார் பதினோராயிரம் வாக்குகளை மக்கள் வழங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியொரு கட்சியாக இன்று மக்களிடையே இந்த ஆணையை பெற்றுள்ளது. 

மு.கா வின் தலைவரும் அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமை மீது கொண்ட அசையாத நம்பிக்கையும், கட்சியின் மீதான பற்றும்  எமது மக்களிடம் நிறைந்துள்ளது. எதற்குமே சோரம் போகாத உறுதியான நெஞ்சுரம் கொண்ட வாக்களர்களாகவே நமது மக்கள் வாக்களித்துள்ளனர். 

எதிர்கால நமது பிரதேசத்தின் மீதான எதிர்பார்ப்புகள் இன்ஷா அல்லாஹ் சோரம் போகாத நிலையில் பாரபட்சமில்லாது நமது கட்சியினால் முன்னெடுக்கப்படும் . அல்ஹம்துலில்லாஹ் விசேடமாக நமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் இளைஞர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட திட்டங்களை நாம் அமுல்நடத்தவுள்ளோம். இன்ஷா அல்லாஹ் தேர்தல் கால வாக்குறுதிகள் மாற்றமில்லாமல் அமுல்செய்யப்படும். எனவும் கூறினார். 

No comments