Comments System

header ads

ஹசனலி வரலாற்றை திரிவுபடுத்துவது கண்டிக்க வேண்டியது - SMA கபூர் (ஸ்தாபக செயலாளர், மு.கா)

மறைந்த பெரும் தலைவரை கட்சிக்கு அழைத்ததாக ஹஸனலி கூறுவது அபத்தமானது - எஸ்.எம்.ஏ.கபூர் ஸ்தாபக செயலாளர் முஸ்லீம் காங்கிரஸ்
முஸ்லீம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு பல ஆண்டுகளை கடந்து, பல படிகளையும் வென்று ஸ்திரமான நிலையை அடைந்த பின்னரே சவூதியில் இருந்து வந்த ஹஸனலி  சேர்ந்து கொண்டார். இப்போது தான் கட்சியை வளர்த்தவர் போன்று அறிக்கைகள் விடுவது மிக அபத்தமானது என சிரேஷ்ட சட்டத்தரணியும், ஸ்தாபக செயலாளருமான SMA கபூர் தெரிவித்தார்.

முஸ்லீம் காங்கிரசின் உள்ளுராட்ச்சி தேர்தல்களுக்கான பிரச்சார கூட்டத்திலேயே இன்று இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், முஸ்லீம் காங்கிரசின் வரலாற்றில் ஆரம்பம் முதல் இன்றுவரைக்கும் பயணிக்கும் உயிருடனுள்ள முன்னிலை போராளி நான் ஒருவனே. எமது போராட்டத்தில் இணைந்து கொண்டவர்கள் ஸ்தாபக உரிமையை கோர முடியாது. தலைவர் அஷ்ரபினை அழைத்ததாக அவர் தேர்தல் பிரச்சாரத்திற்க்காக மக்களை பிழையாக வழி நடாத்த முயலுவது எவ்வாறு நியாயமானது. அவரது பல அர்ப்பணிப்புகளையும் இது சந்தேகத்திற்குட்படுத்தியுள்ளது. தான் சார்ந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் நோக்கிற்க்காக வரலாற்றினை வளைத்து குழப்பத்தை உண்டு பண்ணுவது மிக பிழையானது.

இந்தக் கட்சியின் மூலமாக சகோதரர் ஹசன் அலி பல சமூக மட்ட அடைவுகளை அடைந்துள்ளார். அதேவேளை சமூகம் இன்றுள்ள நிலையில் நமது சமூகத்திற்க்கான இயக்கத்தில் இருந்து பிறழ்வது பொருத்தமானதல்ல. ஒரே வகையான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பத்தன் ஊடாக இந்த சமூக இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.

இப்போதிருக்கின்ற நமது இயக்கத்தின் தலைமை எல்லா நெருக்கடிகளையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் ஆற்றல் கொண்டது, இறைவன் அவரது ஆயுளை நீட்டி வைக்க வேண்டும். பதவிகள் மாத்திரம் யாருக்கும் இலக்காக இருக்கக் கூடாது, நாம் வருங்கால சந்ததியினருக்கும் முன்னோடியான அரசியல் கலாச்சாரத்தை முன்னுதாரணமாக செய்து காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. எனவும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments