Comments System

header ads

ஏறாவூர் PMGG வேட்பாளர் படுகாயம்



மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான வீதியில் இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவரகளில் இருவர்; ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளருக்கு தலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதால் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் எம். ஜவாஹிர் என்பவரே படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.
இச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments