Comments System

header ads

புது மாப்பிள்ளை தலைமையிலான இந்தியா - தெ.ஆ. மோதும் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்



இந்­திய –- தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்­டவுன் நியூலேண்ட் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கி­றது.
விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்­டிகள் மற்றும் மூன்று இரு­ப­துக்கு 20 போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்­ளது. 
இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் மோதும் முத­லா­வது டெஸ்ட் போட்டி கேப்­டவுன் நியூலேண்ட் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கி­றது.
இந்­திய அணி, தென்­னா­பி­ரிக்க மண்ணில் இது­வரை டெஸ்ட் தொடரை வென்­ற­தில்லை. இதனால் முதன்முறை­யாக தொடரை கைப்­பற்­றுமா என்று ஆவ­லுடன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் இது மிகவும் சவா­லா­னது என்­பதில் சந்­தேகம் இல்லை.
விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய அணி தொடர்ச்­சி­யாக 9 டெஸ்ட் தொடர்­களைக் கைப்­பற்றி முத்­திரை பதித்­துள்­ளது. 
கடந்த 10 தொடர்­களில் விளை­யா­டிய இந்­திய அணி தொடரை இழக்­காமல் இருக்­கி­றது. தென்­னா­பி­ரிக்­காவில் இந்த சாத­னையை நீ­டித்துக் கொள்ள கடு­மை­யாக போராட வேண்டும்.
தொடர்ச்­சி­யாக டெஸ்ட் தொடரை இழக்­காமல் இருக்கும் இந்­தி­யா­வுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் ஆர்­வத்­துடன் தென்­னா­பி­ரிக்கா உள்­ளது. மேலும் 2016ஆ-ம் ஆண்டில் இந்­திய மண்ணில் தோற்­ற­தற்கும் பதி­லடி கொடுக்கும் வேட்­கையில் உள்­ளது.
துடுப்­பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சம­ப­லத்­துடன் இருக்கும் தென்­னா­பி­ரிக்கா சொந்த மண்ணில் அபா­ர­மாக விளை­யாடக் கூடி­யது. இந்த டெஸ்ட் போட்டி இலங்கை நேரப்­படி இன்று பிற்­பகல் 2 மணிக்கு தொடங்­கு­கி­றது. 

Post a Comment

0 Comments