Comments System

header ads

ஜனாதிபதியின் கிழக்கு விஜயம் ; மக்கள் மனநிலை


நல்லாட்சி அரசாங்கத்தின் நிலை நாளுக்கு நாள் வடிவங்களை மாற்றி வருகின்றது. அதேவேளை கிழக்கு முஸ்லிம் முஸ்லிம் சமூகம் தனது நிலையில் மீண்டும் மீண்டும் உறுதியான நிலைப்பாட்டை வெளிக்காட்ட வேண்டிய தருணத்தையும் இது சுட்டிக்காட்டி நிற்கின்றது. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் கிழக்கு விஜயம் பெரிதும் எதிர்மறையான விளைவுகளையே மக்களிடம் ஏற்படுத்தி விட்டுள்ளது எனலாம்.

ஏனெனில், ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு கிழக்கில் காரண கர்த்தாவாக செயல்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அ.இ.ம.க என்பவற்றை தவிர்த்து, ஜனாதிபதியை மிக கேவலமாக திட்டித்தீர்த்த மகான்களை கொண்டு கிழக்கு விஜயத்தை செய்திருப்பதானது மக்களிடையே பெரியளவிலான மன மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பது மிகையல்ல.

தனிநபர்களாக குறித்த முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் விமர்சங்களை முன்வைத்த முறை இன்றும் மக்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது. எப்படி இருப்பினும் ஜனாதிபதியின் கிழக்கு விஜயம் ஓடை நீராகவே இருக்கும்

Post a Comment

0 Comments