Breaking News

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அனைத்து வட்டாரங்களையும் கைப்பற்ற முடியும் ; மு.கா வேட்பாளர்கள்


அட்டாளைச்சேனை, நிந்தவூர், பொத்துவில், இறக்காமம், போன்ற பிரதேச சபைகளையும்  கல்முனை மாநகரம், அக்கரைப்பற்று மாநகர சபை ஆகியவற்றையும் முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கியதேசிய கட்சி கூட்டமைப்பு வெற்றி கொள்ளும் வாய்ப்புகளே அதிகம் என அட்டாளைச்சேனை முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளரும், முன்னாள் மாகாண அமைச்சருமான ஏ.எல்.எம். நஷீர்  தெரிவித்தார். 

நேற்று கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் அவர் உரையாற்றுகையில், மு.கா வின் பழி சுமத்துகின்ற வரலாறு என்பது மிக நீண்டது. இந்தத் தேர்தலிலும் நாம் அவற்றை முகன்கொடுக்கின்றோம். இதில் புதிய விடயங்கள் ஒன்றுமில்லை, மக்களை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. நாம் மக்களுக்காக நமது கொள்கைகளையும், தலைமையின் நிலைப்பாட்டையும் விளக்க வேண்டிய கடமையுள்ளது. இந்நிலையில் நீங்கள் அனைவரும் இதே உத்வேகத்துடன் நமது பிரதேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்காகவும் உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

அட்டாளைச்சேனை மு.கா மத்திய குழுவின் தேர்தலுக்கான மத்திய தலைமைக் காரியாலயத்தில் தேர்தல் வேலைக்குழு வின் ஏற்பாட்டில் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது, இதில் கலந்து கொண்ட மு.கா வின் ஸ்தாபக செயலாளர் எஸ்.எம்.ஏ கபூர், மற்றும் யூ.எம். வாஹித் ஆகியோர் வேட்பாளர்களின் தேர்தல் நுணுக்கங்களை ஆலோசனை வழங்கியதுடன், தேர்தலுக்கான சவால்களையும் கலந்துரையாடினர். 

வேட்பாளர்கள் தமது குறிப்பாக ஏகமாக அனைத்து வட்டாரங்களையும் தம்மால் கைப்பற்ற முடியும் என உறுதி மொழி கூறினர். 

No comments