Header Ads

Breaking News

ஜனா­தி­ப­தியின் மக்கள் செல்­வாக்கை குறைப்­ப­தற்கு சதி


ஜனா­தி­ப­தியின் செல்­வாக்கை குறைப்­ப­தற்கு சதி நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பல கட்­சி­களும் இதில்  தொடர்புபட்­டி­ருப்­ப­தாக தகவல் வெளி­வந்­துள்ளது என சுதந்­திரக்கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
நாட்டில் தூய்­மை­யான அர­சி­யலை ஏற்­ப­டுத்­தவும் ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் ஜனா­தி­பதி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்றார். கடந்த காலங்­களில் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டும்­போது அந்த பிரச்­சி­னையை மறைப்­ப­தற்கே ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்­டன. மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­வந்­த­து­முதல் அந்த நிலைமை  மாறி­யுள்­ளது. அதன் கார­ண­மாக மக்­க­ளுக்கு ஜனா­தி­பதி மீதான நம்­பிக்கை அதி­க­ரித்து வரு­கின்­றது. 
அத்­துடன்  சிறி­லங்கன் எயார் மற்றும் மிஹின் லங்கா நிறு­வ­னத்தில் இடம்­பெற்­றி­ருக்கும் ஊழல் தொடர்­பா­கவும் விசா­ர­ணை­களை நடத்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைப்­ப­தற்கு தேவை­யான பரிந்­து­ரை­களை ஜனா­தி­பதி மேற்­கொண்­டு­வ­ரு­கின்றார். ஜனா­தி­ப­தியின் இந்த நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக மக்கள் மத்­தியில் அவ­ருக்கு இருந்­து­வரும் செல்­வாக்கு அதி­க­ரித்து வரு­கின்­றது. அத்­துடன் இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கும் தேர்­த­லுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேர்­த­லுக்கு முன்­னரே இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு வரும் என்­றுதான் எதிர்­பார்க்­கப்­பட்­டது. என்­றாலும் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை சற்று தாம­தித்­தது.
அத்­துடன் கடந்த 2 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எந்த நிலையில் இருந்­தது என்று அனை­வ­ருக்கும் தெரியும். ஆனால் நாட்டின் முன்­னேற்றம் மற்றும் தூய்­மை­யான அர­சி­யலை மேற்­கொள்ள ஜனா­தி­பதி மேற்­கொண்­டு­வரும் நட­வ­டிக்கை கார­ண­மாக மக்­க­ளுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மீது நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது. அதனால் தேர்­த­லுக்கு வேட்­பு­மனு தாக்கல் செய்­யும்­போது எங்­க­ளுடன் இணைந்­து­போட்­டி­யிட அதி­க­மா­ன­வர்கள் முன்­வந்­ததால் நாங்கள் பெரும் சிர­மத்­து­டனே வேட்­பா­ளர்­களை தெரி­வு­செய்­ய­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. தற்­போது ஏனைய கட்­சி­களின் அர­சியல் செயற்­பாட்­டா­ளர்கள் அதி­க­மா­ன­வர்கள் எங்­க­ளுடன் இணைந்­து­கொள்­கின்­றனர்.
 எதிர்­கா­லத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மக்­களின் கட்­சி­யாக மாறு­வ­துடன் சகல இன மக்­களின் கட்­சி­யாக மாறு­வது நிச்­ச­ய­மாகும். அத்­துடன் இன,மத மற்றும் குடும்ப ஆதிக்கம் அற்ற கட்­சி­யாக மாற்­றி­ய­மைப்­பதே ஜனா­தி­ப­தியின் திட்­ட­மாகும். அதனால் ஜனா­தி­ப­தியின் இந்த வேலைத்­திட்­டங்­களால் மக்கள் மத்­தியில் நாளுக்­குநாள் அவர் பிர­பல்­ய­ம­டைந்து வரு­கின்றார். இதனை தடுக்கும் நோக்­கத்தில் ஜனா­தி­ப­தியின் பெய­ருக்கு களங்கம் ஏற்­ப­டும்­வ­கை­யிலும் கட்­சியின் கெள­ர­வத்­துக்கு பாதிப்பு ஏற்­ப­டும்­வ­கை­யிலும் சதி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. 
அத்துடன் சகல கட்சிகளும் கலந்துரையாடி இதனைமேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதி தொடர்பில் பொய் பிரசாரங்களை பரப்புவதற்கும் சம்பளம் கொடுத்து அதிகமானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பெற்று வருகின்றது என்றார்.

No comments