Comments System

header ads

முஸ்லிம் சமூகத்தை விலை பேசியே இன்று எதிரணிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளன ; எ.எல்.எம். நஷீர் - முன்னாள் மாகாண அமைச்சர்


உள்ளூர் அதிகாரங்களை தெரிவு செய்கின்ற தேர்தலாக இருந்தாலும் முஸ்லீம் காங்கிரசையும், முஸ்லிம் சமூகத்தையும் பலமிழக்கச் செய்கின்ற சதி திட்டத்திற்கு ஆதரவான அணியாகவே இம்முறை எதிர்கட்சிகள் களமிறங்கியுள்ளதாக முன்னாள் மாகாண அமைச்சர் எ.எல்.எம். நஷீர் தெரிவித்தார். 

எதிர் வருகின்ற உள்ளூராட்சி  தேர்தலில் அட்டாளைச் சேனை பிரதேசபையின் புறத்தோட்ட வட்டாராத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஜக்கிய தேசிய கட்சியில் போட்டி இடும் ஏ.கே.முஹம்மட் (கிதிர் மாஸ்டர்)அவர்களை ஆதரிப்பது தொடர்பான கலந்துரையாடல் (10.01.218)இன்று பி.ப. ஹம்சா சனூஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அமைச்சர் நஷீர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அவர் பேசுகையில் "முஸ்லீம் காங்கிரசினூடாக மாத்திரமே இலங்கை முஸ்லீம் சமூகம் தனது நலனை பேண முடியும். இதை புரிந்து கொண்ட சதிகாரர்களே முஸ்லீம் காங்கிரசை பலமிழக்கச் செய்கின்ற மறைமுக அஜெண்டாவுடன் செயல்படுகின்றார்கள். இதற்க்கு துணை நிற்ப்பவர்களே இந்தக் இன்று புதிய கூட்டாக களமிறங்கி இருக்கின்றார்கள். 

தனியாக முஸ்லீம் காங்கிரசை வீழ்த்த முடியாது எனும் நிலையிலேயே இன்று கூட்டாக களமிறங்கி இருக்கின்றார்கள். நமது கட்சி பல சதிகளையும் சதிகாரர்களையும் கண்டு மீண்டிருகின்றது. இன்று இந்த வட்டராத்தில் கல்விக் குடும்பத்தில் இருந்து ஒரு அனுபவசாலியை இறக்கி இருக்கின்றோம். அவர் தனது கடைசிக் காலம் வரை தனது மக்களின் சிறப்பான வாழ்க்கைக்காக செயல்படுவதாக உறுதி பூண்டிருக்கின்றார். இவரை விடவும் வேறு யாரை தெரிவு செய்வது. தனிப்பட்ட கோப தாபங்களுக்காக கட்சியை பழிவாங்க நினைக்காதீர்கள். எனவும் கூறினார்.

இந்திகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களும் மற்றும் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் அட்டாளைச் சேனை பிரதேச சபை சார்பாக போட்டி இடுகின்ர வேட்பாளர்களும் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தகர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments