Breaking News

தமிழ் முஸ்லீம் மக்களுக்காக ஐ.தே.க பல தியாகங்களை செய்துள்ளது ; ஏ.எல். தவம் மு.மா.ச.உ



தமிழ் முஸ்லீம் மக்களுக்காக ஐ.தே.க பல தியாகங்களை செய்துள்ளது ; ஏ.எல். தவம் மு.மா.ச.உ 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் நிம்மதிக்காக ரணில் விக்ரமசிங்க தனது கட்சியின் 33 லட்சம் வாக்குகளை தியாகம் செய்து இந்த ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளார் என முஸ்லீம் காங்கிரசின் இளைஞர் விவகார செயலாளர் ஏ.எல்.தவம் தெரிவித்தார். 

நிந்தவூர் பிரதேசபை யின் அரசடி நகர் வட்டார (அட்டப்பள்ள) வேட்பாளர் KMM ஜாரிஸ் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற கருத்தரங்கிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் தமிழ் கூட்டமைப்பும் சேர்ந்து சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பாடுபடுகின்ற ஒரு நிலையிலேயே இத்தேர்தலை நாம் சந்தித்திருக்கின்றோம். பரஸ்பர நம்பிக்கைகளை கட்டியெழுப்பி அதன் மூலம் மாத்திரமே நமது எதிர்கால தேவைகளை அடைந்து கொள்ள முடியும் என்கின்ற கொள்கையின் அடிப்படையில் நாம் இணைத்து இன ஒற்றுமைக்கான முன்னுதாரணமாக செயட்பட வேண்டியுள்ளது.

இன்று மு.கா விட்டு பிரிந்து சென்றிருக்கின்ற அரசியல் பிரமுகர்கள் இன ஒற்றுமையை எதிர்த்து பிரித்தாளும் தந்திரங்களை கொண்ட சக்திகளிடம் சரணாகதி அடைந்திருக்கின்றார்கள். அவர்களை சமூகவாதிகள் என அடையாளம் காட்ட முடியாது.

அதேபோன்று இவர்களின் தலைமை அம்பாறையில் யானை சின்னத்தை விமர்சனம் செய்துவிட்டு மட்டக்களப்பிலும் வன்னியிலும்  யானைக்கு வாக்கு சேகரிக்கின்றார். இவ்வாறு எவ்விதமான கொள்கையும் இல்லாமல் தமது தனிப்பட்ட அதிகாரப்பசிக்காக நம்மையும் நமது ஒற்றுமையையும் குலைக்க எத்தனிக்கின்றார்கள். 

இவ்வாறு குதிப்பவர்களுடைய, பறப்பவர்களுடைய  தேவை என்ன இலக்கு என்ன என தேடிப்பார்த்தால் தனிப்பட்ட இலக்குகளை அடைந்து கொள்வது மாத்திரமே என்பது மிகையல்ல. அதேபோன்று முஸ்லீம் காங்கிரசை பலவீனப்படுத்தி முஸ்லீம்களின் குரலை நசுக்க சர்வதேசத்தின் வலைக்கு விலை போயுள்ள தனி நபர்களின் பின்னால் நின்று கொண்டே இன்று இவர்கள் மக்களை அழைக்கின்றார்கள். 

மக்கள் புரிந்து கொண்டவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10 ம் திகதி அதை நிரூபிப்பீர்கள். யானைக்கு வாக்களிப்பதன் மூலமாக நமது கட்சியின் நமது சமூகத்தின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்கிறார். 

No comments