Breaking News

பள்ளிக் குடியிருப்பில் மு.கா மீது குதிரை அணி தாக்குதல் - மக்கள் விரட்டியடிப்பு



சுதந்திரக் கட்சி அமைப்பாளரின் தலைமையில் அக்கரைப்பற்று ஐக்கிய தேசியக் கட்சி பிரச்சாரக் கூட்டத்தைக் குழப்பும் முயற்சி தோல்வி ........... 

அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரச்சாரக் கூட்டம் நேற்று (04.01.2018) பட்டியடிப்பிட்டியில் இடம்பெற்றது. அக்கூட்டத்தைக் குழப்ப அதாவுல்லாவின் தேசியக் காங்கிரஸ் கட்சிக்காரர்களுடன் இணைந்து களமிறங்கி இருந்தார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் சமூர்த்தி உத்தியோகத்தர் ஐ.எச்.ஏ. வஹாப்.

பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாயலுக்குள் இருந்து கற்களால் எறிந்துகொண்டு, கூட்டத்தைக் குழப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் இதனைப் பொருட்படுத்தாமல் எறிகளை வாங்கிக் கொண்டு நின்றனர். அங்கு பிரதம உரையினை நிகழ்த்திய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் சுமார் ஒன்றே கால் மணி நேரம் உரையாற்ற கூட்டத்தை முடித்து வைத்தார்.

மின்சாரத்தைத் தடைசெய்த நிலையிலும் மின்பிறப்பாக்கியின் துணையுடனும் அப்பிரதேச மக்களின் ஆதரவுடனும் கூட்டத்தைக் குழப்பும் முயற்சி தோல்வியில் முடிவடையச் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியினர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். மேற்படி கூட்டத்தைக் குழப்ப எடுக்கப்பட்ட முயற்சியினால் மக்கள் மத்தியில் அதாவுல்லாவின் அணி மீதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments