Breaking News

அட்டாளைச்சேனை பெரிய பள்ளி வட்டாரம் லொயிட்ஸ் ஆதம்லெப்பை யின் தலைமையில் அமோக வெற்றி பெரும்



அட்டாளைச்சேனை பெரியபள்ளி வட்டாரம் ஒர் பார்வை

ஏ.எல்.றமீஸ்

03,07,12 ஆகிய கிராம சேவை பிரிவுகளை உள்ளடக்கிய பெரியபள்ளி வட்டாரத்தில் 2300 பதியப்பட்ட வாக்குகள் உள்ளன. இதில் அளிக்கப்படும் வாக்குகளில் 95 வீதமான வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டுக்கே விழுவதற்கான வாய்ப்பு அதிகமான காணப்படுகின்றது.

85 வீத வாக்குகளைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக காணப்பட்ட போதிலும் முன்னாள் சுகாதார அமைச்சர் நஸீரின் தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் தொழிலதிபரும் சமூக சேவையாளருமான யூ.கே.ஆதம்லெப்பை (லொய்ட்ஸ்) அவர்களை களமிறக்கி போட்டியிட வைத்ததன் மூலம் 85வீதமான வாக்கு வங்கி 95 வீதமாக அதிகரித்துள்ளது.

அத்தோடு லொய்ட்ஸ் ஆதலெப்பைக்கு எதிராக களமிறக்கப்பட்ட எதிர்த் தரப்பின் இரண்டு வேட்பாளர்களும் ஜனரஞ்சகமற்றவர்களாகவும் மக்களோடு எந்தவித தொடர்பாடலற்றவர்களாகவும் காணப்படுவது லொய்ட்ஸ் ஆதலெப்பைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

லொய்ட்ஸ் ஆதம் லெப்பை மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றதோடு நிறைய மக்களுகளின் வாழ்வாதரங்களின் முன்னேற்றத்திற்கு பல உதவிகளை செய்து வருகின்றவர்.

அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் வீதி விஸ்தரிப்புக்கு பெரும் பங்காற்றியவர்.

அட்டாளைச்சேனை 14ம் பிரிவில் அமைந்துள்ள நிலாமிய பாடசாலையின் நுழைவாயிலை பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணித்து வருகின்றார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு பல தொழில் வாய்ப்புக்ளை வழங்கி வருகின்றவர்.

மாவட்டம்; கடந்து ஊர் கடந்து தொழில் புரியும் நமது சகோதர சகோதரிகளை தமது சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற்றுக் கொடுத்து வருகின்றார்.

ஆலம்குளம் பள்ளிவாசல் தொடக்கம் இன்னும் எத்தனையோ பள்ளிவாசல்களுக்கு நிதியுதவிகளை வழங்கியதுடன் தொடர்ந்தும் வழங்கியும் வருகின்றார்.

விளையாட்டுத் துறையில் ஈடுபடும்
இளைஞர்களுக்காக பல வருடங்களாக தனது சொந்த நிதியில் சகல வசதிகளையும் பெற்றுக் கொடுத்து வருகின்றார்.

இப்படியான சமூக சேவையில் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் லொய்ட்ஸ் ஆதலெப்பையை எதிரணி வேட்பாளர்களால் தோற்கடிக்க முடியுமா?

மேலும் விளையாட்டு துறையில் நமது ஊருக்கு புகழ் சேர்த்த சமூக சேவையாளர் முன்னாள் தேசிய காங்கிரஸின் வேட்பாளர் ஹம்ஸா சனூஸ் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து லொய்ட்ஸ் ஆதலெப்பைக்கு ஆதரவளித்து களத்தில் நிற்பதன் மூலம் சிதறிய சிறு வாக்குகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வட்டாரத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டுமென்பதற்காகவும் பட்டியல் வேட்பாளராக நகர திட்டமிடல் துறையில் பட்டம் பெற்ற  ஒரு ஒலுவில் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற திறமையான பெண் வேட்பாளரை இணம்கண்டு நிறுத்தியது தலைவர் ரவூப் ஹக்கீமின் சாதுரியம்

No comments