Breaking News

முஸ்லிம் காங்கிரஸ் 15 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும்



- அக்கரைப்பற்று அசாம் - 
கல்முனை மாநகரம், நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மாநகரம், பொத்துவில், இறக்காமம், உட்பட நாடளாவிய ரீதியில் 15 உள்ளூராட்சி சபைகளுக்கு மேல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கைப்பற்றும் என தெரிவிக்கப்படுகின்றது. 

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசில் இருந்து அதன் செயலாளர் நாயகம் உட்பட்ட அணியினர் பிரிந்து எதிராக தேர்தல் களமொன்றில் செயல்ப்படும் நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது. 

அ.இ.ம.க, சிறீலங்கா சுதந்திரக்கட்சி, பொது ஜன பெரமுன, PMGG மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் கட்சி என்பன மு.கா வுக்கேதிராக மிகப்பலமான எதிர்ப்பினை காட்டும் நிலையில் இவ்வாறன முடிவொன்றினை மக்கள் வெளிக்காட்டும் நிலை என்பது சமூகத்தின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான ஆணையே தவிர வேறொன்றில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எது எவ்வாறிருப்பினும் மு.கா தலைமை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும், மு.கா தலைமையின் சாணக்கியமும் இத்தேர்தலில் மு.கா வின் வெற்றிக்கு களமமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

No comments