மட்டு. வீடமைப்பில் குளறுபடி ; யோகேஸ்வரன் எம்.பி
வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களினால் மக்கள் மீது சுமை ஏற்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
மேலும் இந்த வீட்டுத் திட்டங்கள் வழங்கும்போது பாதிக்கப்பட்ட பிரிவினரை தெரிவுசெய்யும் செயற்பாட்டில் குளறுபடிகள் இடம்பெற்றிருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
No comments