Header Ads

Breaking News

அதாவுல்லாஹ் தைக்கா நகருக்கு செய்த துரோகம் ; மனம் திறக்கிறார் சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் ரமீஸ்அதாஉல்லா  தைக்காநகருக்கு பெரும் வரலாற்று துரோகம் செய்தவர்.

பெரும் தலைவர் அஷ்ரப் மரணித்த பிற்பாடு அக்கரைப்பற்றின் அரசியல்களம் சேகு இஸ்ஸதீன் அவர்களின் கைகளில் ஒங்கியிருந்தது. இதற்கு இன்னும் வலுச்சேர்க்கும் விதமாக பேரியல் அஷ்ரபின் அமைச்சுப் பதவியும் அக்கரைப்பற்றை அடிபாட்டிகளின் கூடாரமாக மாற்றியிருந்தது.

அந்த நேரங்களில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக செயற்பட்ட அதாஉல்லாவுக்கு அக்கரைப்பற்றில் ஒரு கூட்டத்தையாவது கூட்ட முடியாத அளவுக்கு அச்சுறுத்தல் நிரம்பி வழிந்தது. 

பாதுகாப்பு கருதி; இரவு நேர தூக்கத்துக்காக அட்டாளைச்சேனைக்கு அவர் வந்து தூங்குவது வழக்கம் 

சந்திரிகா திடிரென  ; ஆட்சியை கலைத்து விட்டு புதிய பாராளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 
இத் தேர்தலில்; பலம் பொருந்திய அதிகாரமுள்ள பேரியல் அஷ்ரப் மற்றும் சேகு இஸ்ஸதீன் ஆகியோர்களை எதிர்த்து அக்கரைப்பற்றில் மாத்திரமல்ல மாவட்ட முழுவதும் தேர்தல் பணியாற்றுவதற்கு அதாஉல்லாவால் முடியாமல் போனது.

மேலும் சேகு இஸ்ஸதீனை எதிர்த்து அதாஉல்லாவோடு இணைந்து பணியாற்றுவதற்கு அக்கரைப்பற்று இளைஞர்களில் ஒரு சிலரைத் தவிர வேறு ; யாருமே முன்வரவில்லை.

இதனால் அதாஉல்லாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 

அப்போதுதான்  எனக்கு ஒரு அழைப்பு வந்தது அழைப்பை கொண்டு வந்தவர் தற்போது ஆலம்குளத்தில் போட்டியிடும் சமட் ஜீ.எஸ். அதாஉல்லா உங்களை அவசரமாக சந்திக்கவுள்ளார் உடனே செல்லுங்கள் என்றார்.

நான் உடனடியாக அவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் என்னை அழைத்துக் கொண்டு அவரின் படுக்கையறைக்குள் சென்றார்.அவர் பேசினார் "றமீஸ் அக்கரைப்பற்றில் தேர்தல் செய்ய முடியாமல் உள்ளது நீ திருமணம் முடித்த உனது பிரதேசத்திலுள்ள இளைஞர்களை ஒன்றுதிரட்டி இங்கே கொண்டுவா சதிகாரர்களிடமிருந்து முஸ்லிம் காங்கிரஸை பாதுகாப்போம்" என்றார்.

நான் எனது தைக்காநகர் பிரதேசத்து நண்பர்களை எனது வீட்டுக்கு அழைத்து விடயத்தை சொன்னேன். நண்பர்களும் முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளாக இருந்த காரணத்தினால் அக்கரைப்பற்றுக்கு சென்று தேர்தல் பணியில் ஈடுபட சம்மதித்தனர்.

15பேர் கொண்ட இளைஞர்களை அழைத்துக் கொண்டு அதாஉல்லாவின் வீட்டுக்கு சென்றேன்.தைக்காநகர் இளைஞர்களைப் பார்த்து கண்கலங்கினார் அதாஉல்லா. 

அவர் கலங்கியதைப் பார்த்து சங்கடப்பட்ட நான் ஸேர் நாங்கள்  உங்களோடு இருக்கின்றோம் தேர்தலை  முடித்து விட்டுத்தான் நாங்கள் எங்கள் வீடுகளுக்கு செல்வோம் என்றேன் ஆனால் ஒரே ஒரு உத்தரவாதம் எங்களுக்கு தர வேண்டும் என கேட்டேன். என்ன சொல்லு என்றார்;.

அதற்கு நான் ஸேர் நீங்கள் இத் தேர்தலில் வெற்றி பெருவது உறுதி அமைச்சுப் பதவி கிடைப்பதும் உறுதி அப்படி கிடைத்தால் நீங்கள் தைக்கா நகரில்தான் முதலாவது அபிவிருத்தியை தொடங்க வேண்டும் அத்தோடு தொழில் வழங்கப்படுமிடத்தில் இந்த இளைஞர்களுக்குத்தான் முதலில் வழங்க வேண்டுமென கூறினேன்

 இதைக் கேட்ட அதாஉல்லா சத்தியம் செய்தார்.நான் அமைச்சரானால் தைக்கா நகரிலிருந்துதான் எனது பணியை ஆரம்பிப்பேன் என்றார்.

நாங்கள் நம்பினோம் எங்கள் பணியை ஆரம்பித்தோம் அக்கரைப்பற்று பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு முன்பாக நாங்கள் கொடிகளை கட்டிக் கொண்டிருந்த போது அக்கரைப்பற்று பொலிஸார் திடிரென வந்து அஸ்லம் (கெண்டின் ஹனிபாவுடய மகன்) அலாவுதீன் (ஒலுவில் சீனியரின் பேரன்;) அமீர் றைவர் நியாஸ் (மூஸாவின் மகன்) ஆகியோரை கைது செய்து கூண்டில் அடைத்தனர்.

காலை 9.30 மணிக்கு கைது செய்யப்பட்ட எமது தைக்காநகர் போராளிகள் இரவு 8.00 மணிக்கு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட எமது இளைஞர்கள் தனது வீட்டுக்கு செல்லாமல் அதாஉல்லாவின் வீட்டுக்கே வந்தனர்.அதாஉல்லா ஒரு வாகனத்தை தந்து வீட்டுக்கு போகுமாறு சொன்னார் இவ் இளைஞர்கள் இல்லை சேர் அக்கரைப்பற்று  முழுவதும் நமது கட்சியின் போஸ்ட்டர்கள் கொடிகள் என்பனவற்றை விடிவதற்குள்  ஒட்டி கட்டிவிட்டுத்தான் வீட்டுக்கு செல்வோம் என்றனர்.

தைக்காநகர் இளைஞர்கள் கூறியது போன்று விடிய விடிய வேலை செய்தனர். காலையில் பார்க்கும் போது; அக்கரைப்பற்றின் பிரதான வீதிகள் முழுவதுமாக கட்சியின் கொடிகள் பறந்தன.
அது மாத்திரமல்ல அந்த தேர்தல் முடியும் வரைக்கும் மாவட்டம் முழுவதும் எமது இளைஞர்கள் அதால்லாவோடு பயணித்து அவருக்கு பக்க பலமாக செயற்பட்டனர்.

தைக்கா நகர் இளைஞர்களை குறி வைத்து பேரியல் அணி அலைந்து திரிந்தது.அதன் விளைவுகள்தான் துப்பாக்கிகளைக் கொண்டு வந்து தைக்காநகர் பிரதேச இளைஞர்களை ஒரு இரவு குறி வைத்து தாக்கினர். மனாப் (ஆட்டிறைச்சிக்கடை) அவரின் வளவிற்குள் அமைக்கப்பட்ட முன்பள்ளி சிறுவர்களின் கலை விழாவிற்கான மேடையை துப்பாக்கியால் சுட்டு தீயிட்டு கொழுத்தினர்.இப்படி அத்தேர்தல் முடியும் வரைக்கும் பல சம்பவங்கள்

இந்த போராட்டங்களின்; பிற்பாடு அதாஉல்லா அமோக வெற்றி பெற்;று  ரணிலின் ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்தற்ற வீதி அபிவிருத்தியமைச்சரானார்.
அதாஉல்லா அமைச்சராகி முதலாவது செய்த வேலை தைக்கா நகரையும் அக்கரைப்பற்றையும் பிரித்து மையவாடியில் நுழை வாயிலை கட்டினார்.

பல தொழில்களை பல பேருக்கு வழங்கினார் 

தைக்கா நகரைச் சேர்ந்த யாருக்குமே அவர் எந்தவிதமான தொழில்களையும் அவர் வழங்கவில்லை.

அவர் வகித்த எந்த அமைச்சிலிருந்தும் எந்த அபிவிருத்தியையும் அவர் செய்யவில்லை 
என்பது தைக்கா நகருக்கு அதாஉல்லா செய்த  வரலாற்று துரோகம் என்பதை யாரும் மறந்துவிடவில்லை

தேவை ஏற்படின் ஆதாரத்துடன் இன்னும் தெளிவுபடுத்துகின்றேன

No comments