Breaking News

தைக்கா நகர் மக்களை ஏமாற்றவே அதாவுல்லாஹ் வின் கட்சி முயற்சிக்கிறது - வேட்பாளர் சப்ரின் மௌலவி


முஸ்லீம்களை அரசியல் அனாதரவாக்கும் கட்சிகளே இன்று தைக்காநகர் மக்களையும் விலை பேச வந்திருக்கின்றார்கள் என முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளர் சப்ரின் மௌலவி தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் தைக்காநகர் வட்டாரத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் வேட்பாளர் சப்ரின் மௌலவி அவர்களை ஆதரிக்கும் கருத்தராங்கு இன்று அட்டாளைச்சேனை 15 ம் குறிச்சியில் இடம்பெற்ற போதே இவ்வாறு கூறினார், மேலும் அவர் பேசுகையில்,

எமது பிரதேசம் ஆண்டாண்டு காலமாக அதாவுல்லாஹ்வின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டிருகின்றது, ஆனால் மக்களுக்காக அவர்கள் செய்தது என்ன ? ஏன் அவர்களின் ஆதரவாளர்கள் அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு என்ன செய்திருக்கின்றார்கள் என நான் கேட்க விரும்புகிறேன். நெடுங்காலமாக ஆட்சியின் உச்சத்திலிருந்தவர்கள் எமது மக்களை ஏமாற்றவே முனைந்திருக்கின்றார்கள். 

அவரின் அடிவருடிகள் ஒரு சிலருக்காக எமது பிரதேசத்தை அடமானம் வைக்கிற துரோகத்தை எமது மக்கள் செய்ய முடியாது. அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கவும் முடியாது. 

நாம் நமது மக்களின் தேவைகளை அறிந்த நிலைமையிலேயே இந்தக் களத்தில் இறங்கியிருக்கின்றோம். ஆட்சியமைக்கப்போகும் முஸ்லீம் காங்கிரசோடு எமது பிரதேசமும் இணைந்து கொள்வதன் மூலமாக நமது மக்கள் பயனடைய வேண்டும் என்பதே எனது விருப்பு. இன்ஷா அல்லாஹ் நமது பிரதேசத்தில் யானைச்சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலமாக நாமும் வெற்றியின் பங்காளராவோம். என்றார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண முன்னாள் அமைச்சர் கௌரவ ஏ.எல்.எம். நஷீர் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வேட்பாளர்கள், மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

No comments