Header Ads

Breaking News

ஒலுவில் கடலில் பரபரப்பு



இன்று காலை மீன் பிடிக்கும் நோக்குடன் கடலுக்குச் சென்ற இருவரில் ஒருவர் கடலில் ஏற்பட்ட  திடீர் நிலை மாற்றம் காரணமாக  காணாமல் போயுள்ளார். கடற்படை மற்றும் பிரதேச  மீனவர்களின்  ஒத்துழைப்புடன் இவரை தேடிவருகின்றனர். 

அபூஸாலி இப்ராஹீம் (39) ஒலுவில் 4 எனும்  விலாசத்தில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 
கடலில் ஏற்பட்டு  வரும்  மாற்றங்கள் மற்றும் உயிர் பல்வகைமைகளின் நடமாட்டம் என்பவற்றை கருத்தில் கொண்டு இயறகை அனர்த்தம் ஒன்றை மீனவர்கள் பெரிதும் எதிர்வு கூறுகின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


ஒலுவில் துறை முகம் அமைக்கப்பட்டதன் பின்னர் சாதாரண மீன் பிடி மக்கள் பல இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். கடலின் ஓங்காரம் அதிகமாகின்ற போது ஒலுவில் மக்கள் பல்வேறு இழப்புகளையும் சந்திக்க வேண்டி வரலாம் எனவும் அச்சப்பட வேண்டியுள்ளது. 

No comments