Breaking News

முஸ்லீம் காங்கிரஸ் திட்டமிட்ட பாதையில் பயணிக்கும் ; ஏ.எல்.எம் அலியார் பாலமுனை அமைப்பாளர்



உள்ளுராட்சி சபை தேர்தல் என்பது பிரதேச அபிவிருத்தியினை அடிப்படையாக கொண்டதும் பிரதேச மக்களின் தேவைகளினை இயலுமான அளவு நிவர்த்தி செய்வதுமாகும்.
இன்ஷாஅல்லாஹ் எமது பாலமுனை கிராமத்தின் நிலையான அபிவிருத்தி 2018 இல் இருந்து

01 .பொதுச் சுகாதாரம் ( எமது பாலமுனை வைத்தியசாலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் )
02 .திண்மக் கழிவகற்றல் வாகன முறைமை எமது பாலமுனை பிரதேசத்தில் குறிப்பிட்ட சில வீதிகளுக்கு மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது இச் சேவையினை அனைத்து வீதிகளுக்கும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
03. பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் கிடைக்கப் பெற்ற 8 கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்தியில் எமது கிராமத்தில் உள்ள 80% வீதிகள் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டு பூர்த்தியாகும் தறுவாயில் உள்ளது. மீதமாக இருக்கும் வீதிகளையும் விரைவில் புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
04. வடிகானமைத்தலும் அதனை முறையாக பராமரித்தலும்
மழைகாலத்தில் எமது கிராமத்தில் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்படுவது நாம் அனைவரும் அறிந்த விடயமே .இதனை தடுக்கும் வகையில் முறையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்
05 .தெருக்களுக்கு வெளிச்சம் தருதல்
கட்சி பேதம் இன்றி அனைவரும் பயனடையும் வகையில் அனைத்து வீதிகளுக்கும் பழுதடையாத நீண்டகால பாவனை கொண்ட மின் விளக்குகளினை கொண்டு தெருவிளக்குகள் அமைக்கப்படும் .
06. சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும்
07. விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
எமது கிராமத்தில் காணப்படுகின்ற விளையாட்டுக் கழகங்களுக்கு தேவையான உபகரணங்களினை இலவசமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும்
08.மையவாடியினை புனரமைத்தலும் பராமரித்தலும்
09. நூலக வசதிகளை நவீன மயப்படுத்தல்
எமது பாலமுனை கிராமத்தில் காணப்படுகின்ற நூலகத்தினை தற்கால இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் நவீன மயப்படுத்தல்
10. பொது மல சல கூடங்களை அமைத்தலும்,பராமரித்தலும்
11. குடிநீர் வசதிகள் அற்று காணப்படுகின்ற எமது பாலமுனை வறிய மக்களுக்கு அதனை இலவசமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
12. பொது நீராடல் நிலையங்களை அமைத்தல், அதனை பராமரித்தல்
13. நடைபாதைகளினை ஏற்படுத்தல்
உடற்பயிற்சிக்காக எமது கிராமத்தில் உள்ள அனைத்து 
வயதினர்களுக்கும் ஏற்றால் போல் நடைபாதைகளினை 
அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

14. முன் பள்ளி நிலையங்களுக்கு தேவையான 
உபகரணங்களினை பெற்றுக்கொடுத்தல்

15.பொதுக் கட்டிடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும்
16. தொற்று நோய் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
17. அனர்தத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான 
அனைத்து உதவிகளும் இலவசமாக வழங்க நடவடிக்கை 
மேற்கொள்ளபடும்

18. பெண்கள் அபிவிருத்தி
எமது கிராமத்தில் வாழும் பெண்களுக்கு சுய தொழிலில் 
ஈடுபட அதிகமான வாய்ப்புகளினை ஏற்படுத்தி 
கொடுக்க நடவடிக்கைகள் மேட்கொள்ளப்படும்

19. மின்சாரம் வழங்கல்
மின்சார வசதிகள் அற்று காணப்படுகின்ற எமது 
பாலமுனை வறிய மக்களுக்கு அதனை இலவசமாக/ 
மானிய அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை 
எடுக்கப்படும்

20. கல்வித் தளபாடங்கள்
பாடசாலைகளுக்கு தேவையான தளபாடங்களை 
பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

21. வீடமைப்புத் திட்டம்
வீடுகள் அற்று காணப்படுகின்ற எமது பாலமுனை வறிய 
மக்களுக்கு அதனை இலவசமாக பெற்றுக்கொடுக்க 
நடவடிக்கை எடுக்கப்படும்

22.அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல்
எமது கிராமத்தினை அபிவிருத்தி செய்வதற்காக எமது 
கிராமத்தில் காணப்படுகின்ற கல்விமான்களின் 
உதவியுடன் பாலமுனை அபிவிருத்திக்குழுவினை 
உருவாக்கி அதனடிப்படையில் அபிவிருத்தி 
நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை 
எடுக்கப்படும்

23. கால்நடை பண்ணைகளை நடாத்துதல்
கால்நடை பண்ணையாளர்களுக்கு இலவச கால்நடைகள் 
வழங்கவும் ,ஏனைய உதவிகள் வழங்கவும் 
நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்

24.மார்க்க கல்வியை அதிகரிக்க அறநெறிப் பாடசாலைகளை ஏற்பாடு செய்தலும் அவற்றிற்கு உதவிகள் வழங்குதலும்
25.இஸ்லாமிய நிகழ்வுகளை / விழாக்களை ஏற்பாடு செய்தல்
26. கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு தேவையான உதவிகளினை மேற்கொள்ளல்
27. வறியோருக்கும் முதியோருக்கும் நிவாரணம் வழங்கல்.
28. மீனவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுதல்
29.வறிய மாணவர்களினது கல்விக்கு உதவுதல்
3௦. அங்கவீனர்களுக்கான மாதாந்த உதவிகள் வழங்குதல்
இன்ஷாஅல்லாஹ்.
இவையெல்லாம் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடக நாம் எமது பாலமுனை கிராமத்தில் முன்னெடுக்க இருக்கிற வேலைத்திட்டங்களாகும்
நாம் ஒற்றுமையாக இணைந்து யானை சின்னத்திற்கு வாக்களிப்பதன் ஊடாக எமது பாலமுனை கிராமத்தினை அபிவிருத்தி செய்ய முடியும்

ஏ.எல்.எம்.அலியார் 
பாலமுனை அமைப்பாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 
2017.12.26

No comments