மு.கா உள்ளுராட்ச்சி தேர்தலில் ஐ.தே க வுடன் இணையக்கூடாது - எஸ்.எல்.முனாஸ் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்) - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, December 4, 2017

மு.கா உள்ளுராட்ச்சி தேர்தலில் ஐ.தே க வுடன் இணையக்கூடாது - எஸ்.எல்.முனாஸ் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்)!!.ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கவில்லை... முஸ்லிம் காங்கிரசின் தீவிர செயற்பாட்டளர்- அட்டாளச்சேனை முனாஸ்.!!
****************************************
இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலை சிலை விவகாரம் ஒரு அப்பட்டமான அத்துமீறல் அதனைக் கேட்ட நம்ம முஸ்லீம் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் சகிதம் இருக்க அம்பாரையில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தயாகமகே வழங்கிய பதில் இறக்காமம் மாத்திரம் அல்ல கல்முனை இருந்து பொத்துவில்வரை பெளத்த புனிதபூமி என்னவும் செய்யலாம் சிலையை அகற்ற முடியாது.

மாறாக இன்னமும் வைக்க வேண்டும் முடிந்ததைச் செய்யுங்கள் என்று கூறிய தயாகமகே என்னும் இனத்துவேசி இருக்கும் கட்சியில்,
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து 
அட்டாளைச்சேனையில் தேர்தல் கேட்பதா..?
 என்ற பாரிய கேள்வியினை சிறீலங்க முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்து கோட்டையாக கருதப்படுகின்ற அட்டாளசேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் ஊடக செயலாளரும், முஸ்லிம் காங்கிரசின் தீவிர செயற்பாட்டாளருமான அட்டாலசேனை முனாஸ் மேற்கண்டவாறு தெரிவிக்கின்றார்.

மேலும் முனாஸ் தனது அறிக்கையில்…இந்த சிலைவைப்பு தொடர்பில் மக்களுக்கு இதுவரை ஏர்க்ககூடிய ஒரு பதிலை வழங்காத ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் கட்சியில் இணைந்து அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சிசபை கேட்பதா..?

அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து தேர்தல் கேட்க முடியாது. ஒரு காலமும் இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அப்படியோ அடங்கிப்போயிருக்க அடுத்த கட்டமாக வரும்தேர்தலை ஐக்கிய தேசிய கட்சிக்காக வென்று கொடுத்து விட்டு நமக்கென்று இருக்கும் ஒரு கட்சியின் பெயரையும் இல்லாமலாக்க இடமளிக்க முடியாது.

அப்படி ஒரு படுகுழியில் விழும் முடிவினை அட்டாளைச்சேனை மக்கள் எடுப்பார்களேயானால் அதனை விட பாரிய நஷ்டம் வேறு எதுவும் இருக்க முடியாது.

எனவே மக்களை ஏமாற்ற நான் ஒருபோதும் முன்னிக்க மாட்டேன். மக்களுக்காக எடுக்கும் முடிவு அது மக்களுக்கேற்ற முடிவாக இருக்க வேண்டுமே தவிர மூடிய அறைக்குள் சிலரின் சுய நலனுக்கான சாக்குநிறப்பும் முடிவாக இருக்க முடியாது.
ஆகவே அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தேர்தல் கேட்க வேண்டும். என்பதே தனது ஆணித்தரமான கருத்தாகும்.
என்பதனை தெளிவாகக் கூறிவைக்க விரும்புவதாகவும் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here