Breaking News

முன்னாள் அமைச்சர் நஸீரிடம் அதாஉல்லா கற்க வேண்டும்


-ரமீஸ் அஹமட் லெப்பை -

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீரின் உறவினர்கள் போட்டியிட எத்தனித்த போதும் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் கட்சிப் போராளிகளுக்கே போட்டியிடுவதற்கு முன்னுரிமை வழங்கிருந்தார்.

சகோதரர் (காக்கா) ஹம்ஸா சனூஸ் மற்றும் நிஸாம் (சகோதரியின் கணவர); ஆகியோரை தேரதலில் போட்டியிட  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அனுமதியளித்த போதும் தனது குடும்ப உறவினர்களைவிட கட்சிப் போராளிகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனக்
 கூறி தனது பெரும் தன்மையை நிரூபித்தார்.

இதற்கு எதிர்மாறாக குதிரைக்; கட்சியின் தலைவர் அதாஉல்லா அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் இரண்டு மகன்களை நிறுத்தி அக்கரைப்பற்று இளைஞர்களுக்கும் நீண்ட காலமாக கட்சிப் பணியில் ஈடுபட்டுவரும் முக்கியஸ்தர்களுக்கு அநீதி இழைத்துள்ளார்.

அதே போன்று அதாஉல்லாவின் கட்சியைச் சேர்ந்த உதுமாலெப்பை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தனது தம்பியையும்,மகளையும் போட்டியிட வைத்துள்ளார்.

இவர்களின் உறவினர்கள் போட்டியிடும் வட்டாரத்தில் பல வருடங்களாக போராடிய கட்சியின் முக்கியஸ்தர்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் மாற்றுக் கட்சியில் இணைந்தும் வருகின்றனர்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் குதிரைத் தரப்பினர் தமது உறவினர்களை போட்டியிட வைப்பது தொடர்பாக அக்கட்சியின் பலர் கருத்து தெரிவித்தனர்.

குறிப்பிட்ட காலமே அரசியலில் இருக்கும் முன்னாள் அமைச்ர் நஸீரின் பக்குவம் அதாஉல்லாவுக்கும் உதுமாலெப்பைக்கும் இன்னும் வரவில்லை என்றனர்.

No comments