Comments System

header ads

அக்கரைப்பற்று நிலையான அபிவிருத்தியை நோக்கி பயணிக்க வேண்டும் - ஏ.எல்.தவம்



எமது மக்களை நிலையான அபிவிருத்தியின் பக்கமாக அழைத்துச்சென்று, வளமான எதிர்காலமொன்றினை கட்டியெழுப்பவே நாம் இவ் உள்ளூராட்சி தேர்தலில் களமிரங்கியுள்ளோம். அத்துடன்  அக்கரைப்பற்று எனது ஊர் என்றால், பதுர் நகர் எனது வீடு என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் AL தவம் தெரிவித்தார்.
 
நேற்றிரவு அக்கரைப்பற்று பதுர்நகர் முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளர் ஜகார்தீன் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

அல்லாஹ்வினுடைய உதவியோடு நாம் பல இன்னல்களில் இருந்து மீண்டிருக்கின்றோம், அப்போதெல்லாம் இப்பிரதேசத்துடன் நான் என்றுமே இணைந்தே பயணித்துள்ளேன். இவ்வாற்றாத்தினுள்ளே என்னுடைய சகோதரங்களே இருக்கின்றீர்கள். கடந்தகால அரசியலில் நம் மீது திணிக்கப்பட்ட துரோகங்களையும், ஏமாற்றங்களையும் நாம் ஒன்று சேர்ந்தே சந்தித்திருக்கின்றோம்.

இப்போது நமக்கொரு காலம் கிடைத்திருகின்றது. நாம் நமது எதிர்கால சந்ததியினருக்காக அவற்றை பயன்படுத்த வேண்டிய தருணம் இதுவே. அரசியலைக் கொண்டு நம்மை அடிமைப்படுத்திய, நமது மக்களை திசை திருப்பியவர்களுக்கு பாடம் புகட்ட எதிர்வரும் பெப்ருவரி 10 ம் திகதியினை நமது ஆணையை நமது வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

Post a Comment

0 Comments